உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

243

விளக்குங்குறி :- உட்தலைப்புகள் கொடுக்கப் பெற்று அதே வரியில் செய்தி தொடருமாயின் தொடருமாயின் விளக்குங்குறியிடுதல் உண்டு. அவையாவன: சில சான்றுகள் போன்ற சொற்களைக் கொடுத்துத் தொடர்ந்து விளக்கங்கள் தரப் பெறுமாயினும் இக்குறியிடுதல் உண்டு. ஆனால் இது போன்ற இடங்களில் சிறு கோடிட்டு எழுதும் வழக்காறு தோன்றி, விளக்குங்குறி கைவிடப்பட்டது. சமக்குறியைப் போன்றே விளக்குங்குறியும் வழக்கொழிந்த

நிலையை அடைந்துவிட்டது என்றே கூறலாம். புள்ளிகள் (.)

சுவடியில் எழுத்து கெட்டோ அல்லது வேறு வகையாலோ விடுபடுமாயின் அவ்விடத்தை நிரப்ப இயலாதபோது புள்ளியிட்டுக் காட்டுவதுண்டு. மேற்கோள்களைக் கையாளும்போது, தேவை யில்லாத ஒன்றிரண்டு சொற்களை விட்டு எழுதினால் விடுபட்ட இடத்தில் இரண்டு புள்ளிகள் இடுதல் வேண்டும். பல சொற்களை விட நேர்ந்தால் மூன்று புள்ளிகள் இட்டால் போதும். ட்டால் போதும். மேலும் சில தொடர்களோ பகுதியோ விட நேர்ந்தால் பல புள்ளிகள் வைத்து எழுதலாம்.

ணைப்புக்குறி : ஒரு வரியில் காட்ட வேண்டிய ஒரு தொடர் இரண்டு மூன்று வரிகளாக மடக்கி எழுதப்படுமாயின் ஒரு பொருள் குறித்து வரும் அவற்றை இணைப்புக் குறியிட்டுக்

காட்டலாம்,

இக்குறிகளைத் தவிர, உடுக்குறி, சிலுவைக்குறி, வாட்குறி போன்ற பலவகையான குறிகளை அடிக்குறிப்புகள் தருவதற்குப் பயன்படுத்தியுள்ளனர். அம்முறை அம்முறை இக்காலத்தில் எண்கள் தந்து பதிப்பிக்கும் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

அடிக்குறிப்பு

ஒரு கருத்தை வலியுறுத்தவும் விளக்கவும் நிலைநிறுத்தவும் பிறருடைய கருத்துகளை எடுத்துக் காட்டுவது ஆய்வாளரின் க கடமையாகும். ஆனால் அக்கருத்துப் பிறருடையது என்பதைத் தெளிவாகக் கூறுவது ஆய்வு மரபு. எடுத்தாளப்பட்ட பிறர் கருத்தை இடம்சுட்டிக் காட்டுவது அடிக்குறிப்பு எனப்படுகிறது. அக்கருத்தைக் குறிப்பிட்டு முடித்தபின் அதன் முடிவில் இடம் சுட்டுவதனால் அடிக்குறிப்பு ஆகிறது. முடிவில் தனிக்குறியிட்டு அப்பக்க முடிவில் அல்லது அவ்வியல் முடிவில் அல்லது முடிவில் குறிப்பிடுவதும் உண்டு. அடிக்குறிப்பு முறை, ஆய்வு

நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/259&oldid=1571343" இலிருந்து மீள்விக்கப்பட்டது