உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

-245

'என்றார் பிறரும்', என்பது இதன் லக்கியமாகும்', ‘என்னும் கூற்றால் உணர்க' என்று கூறும் உரையாசிரியர் கூற்றுகள் 52 சான்றோர் கருத்தை எடுத்தாண்ட செய்தியை உணர்த்துகின்றன. ஆனால் அக்கருத்துகளின் இடம் சுட்டப்பெற வில்லை. இக்குறையை நீக்குதற்கு எழுந்தது 'அடிக்குறிப்பு'

முறையாகும்.

இந்த

எடுத்

மேற்கோள் விதிமுறை : ஒருவர் கருத்தை அவர் நூலிலிருந்து எடுத்தாள்வதற்கு அந்நூலாசிரியரின் இசைவு பெறவேண்டும். சைவு பெறாமல் எடுத்தாள்வது சட்டப்படி குற்றமாகும். இடைக்காலச் சட்டம் இக்காலத்துத் தளர்த்தப்பட்டது. தாண்ட கருத்தை இடம்சுட்டிக் காட்டிவிட்டால் அது தவறாகாது. அவ்வாறு இடம் சுட்டுவதே இன்றைய அடிக்குறிப்பு முறையாகும். நன்றி

அடிக்குறிப்பு ஆய்வுநெறி : அடிக்குறிப்புத் தருவது செலுத்தும் கடப்பாட்டைச் சுட்டுகிறது; ஆய்வாளருக்கும் பிறருக் கும் நன்மை பயக்கிறது. எனவே அடிக்குறிப்புத் தருவதில் ஆய்வு மரபு ஒரு சீர்மையை வற்புறுத்துகிறது.

அடிக்குறிப்பின்

அமைப்பு : : அடிக்குறிப்பின்

இரு வகைப்படுத்தலாம். ஒன்று ஆய்வேட்டின் மற்றொன்று சுவடிப் பதிப்பின் அடிக்குறிப்பு ஆகும்.

அமைப்பினை அடிக்குறிப்பு; விளக்கத்திற்

காக ஆய்வேட்டின் அடிக்குறிப்புமுறை பொதுப்படக் கூறப்பட்டது. ஆயினும் அமைப்பு முறையில் சுவடிப் பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு கூறப்படும்.

சுவடிப் பதிப்பில் பாடவேறுபாடு, குறிப்புரை. ஒப்புமைப் பகுதி, பதிப்பிக்கும் நூல் கையாளப்பட்டுள்ள வேறு இடம் இலக்கணக் குறிப்பு ஆகியவை அடிக்குறிப்பில் இடம்பெறும். சுவடியில் காணப்பெறும் மூலநூல், உரை ஆகியவற்றை முறைப் படுத்தி அச்சிடும்போது, அச்சில் அமையும் வரிகளில் உரிய சொற் களின் முடிவில் வரிக்குச் சிறிது மேலாக எண் கொடுத்து அதே எண்ணைக் கீழே அடிக்குறிப்பில் கொடுத்து அச்சொல்லுக்குரிய விளக்கத்தையோ வேறுபாட்டையோ குறிப்பிடுதல் வேண்டும்.

பாடவேறுபாடுகளைச் சுட்டுவதோடு, பிழைப்பட்ட தொடர் களையும், ஐயமுள்ள தொடர்களையும் எடுத்துக் காட்டலாம். திருத்தம் பெற்ற இடங்களைக் காரணத்தோடு அடிக்குறிப்பில் சுட்டவேண்டும். கருத்து வேறுபாடுகளையும் சுட்டிக் காட்டலாம். 52. தொல். செய்யுளியல், நூற்பா 1; பேராசிரியர் உரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/261&oldid=1571345" இலிருந்து மீள்விக்கப்பட்டது