உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

உ.

ஆய்வடங்கல்

247

எடுத்துக் கொண்ட ஆய்விற்குத் துணைபுரிந்த நூல்களையும் சுவடிகளையும் தொகுத்துக் காட்டும் அட்டவணை ஆய்வடங்கல் எனப்படுகிறது. சுவடிப் பதிப்பிற்குரிய துணை நூல்கள், ஆய்வு முன்னுரைக்குரிய துணைநூல்கள் என இரண்டு வகையிலும் பயன் பட்டவை இப்பகுதிக்குரியனவாகும்.

பதிப்பில் பயன்பட்டவை : சுவடிப் பதிப்பில் நூலுக்குரிய மூலச்சுவடி, ஒப்பிட உதவிய பிற சுவடிகள், சுவடிகள், தாள் - சுவடிகள், பழைய பதிப்புகள் ஆகியவை பதிப்பிற்கு உதவிய ஆய்வடங்கலில் இடம்பெறுவனவாகும். ஆய்வு முன்னுரையில் எடுத்தாளப்பட்ட மேற்கோள் நூல்கள், சுவடிகள் ஆகியவை ஆய்வுரைக்கு உதவிய ஆய்வடங்கலில் இடம்பெறுவன. ஆய்வு முன்னுரையோடு கூடிய சுவடிப் பதிப்பில் இவ்விருவகை ஆய்வடங்கல்களும் இணைந்து இடம் பெறும். மிகுதியாக இருப்பின் தனித்தனியாகவும் அமைக்

கலாம்.

ஆய்வடங்கலின் அமைப்பு : ஆய்வடங்கலை நூலின் இறுதி யில் அமைப்பதே மரபு. எடுத்தாண்ட நூல்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ளுவது இன்றியமையாத ஒன்று. அவற்றை அச்சு நூல்கள், சுவடிகள் (ஓலை, தாள்), பிறவாகிய இதழ்கள், கட்டுரைகள், அறிக்கைகள், ஆவணங்கன், அகராதிகள் எனப் பிரித்துப் பகுத்து அமைப்பது முறையாகும்.

ஆய்வடங்கலை அகரவரிசையில் அமைக்கவேண்டும். இதில் கருத்து வேறுபாடு இல்லை. அவ் அகர வரிசையை வரிசையை ஆசிரியர் பெயர் அடிப்படையில் அமைப்பதா? நூலின் பெயர் அடிப்படையில் அமைப்பதா? ஆய்வேடுகளில் ஆசிரியர் பெயர் அகரவரிசையே காணப்படுகிறது. அச்சுநூல்களில் இருமுறையும் அமைந்துள்ளன. சிரியர் வரிசை ஆங்கில முறையைப் பின்பற்றியது. தமிழில் இம் முறைக்குச் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன.

ஆசிரியர் பெயர்வரிசை - குறைபாடுகள் : தொகை நூல்கள் ஆசிரியர் பலரின் பாடல்களைக் கொண்டவை. ஒருநூல் பதிப்பாசிரியர் பலரால் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நூலுக்குப் பலருடைய உரைகள் வெளியாகியுள்ளன. ஒரே உரைநூலைப் பலர் வெளியிட்டுள்ளனர். பல நூல்களுக்கு நூலசிரியர் பெயர் தெரியவில்லை. இக்குறைகளால் ஆசிரியர் பெயரை முதலில் அகர நிரல் படுத்துவதில் ஒரே மாதிரியான அமைப்பு ஏற்படுவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/263&oldid=1571347" இலிருந்து மீள்விக்கப்பட்டது