உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

249

பெயரின் தலைப்பெழுத்துகள் பின்னால் அமைய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆசிரியர் பெயர் நிரலில், அகரவரிசைக்காக, வரதராசன், மு., என்று குறிப்பிட நேர்ந்தது. ஆனால் இரண்டாவது வரிசையில் அவர் பெயர் வழங்கும் இயல்பிலேயே மு. வரதராசன் என்று குறிப்பிடலாம். இம்முறை மரபு மாறாத தாகவும் அமையும். பெயருக்குப் பின்னால் பதிப்பாசிரியர் முதலான விளக்கத்தைச் சுருக்கமாக அடைப்புக்குறியில் அமைக்க வேண்டும். (பதி), (தொகு); (மொ.பெ) என்பன அச்சுருக்க முறை களாகும் சட்டுரையாயின் இதழின் தழின் பெயர் அல்லது நூலின் பெயர், மேற்கோள் குறிக்குள் கட்டுரையின் தலைப்பு இவற்றை அமைத்து, ஆசிரியர் பெயரின்பின் (கட்டுரை) என்று குறிப்பிட லாம். நூல் பெயரைத் தொடர்ந்து தொருதி, பதிப்பு ஆகிய வற்றின் எண்களும் அமையவேண்டும் தொகுதி 3; (பதி-2) என்று

கொடுக்கவேண்டும்.

நூல் வெளியீட்டாளருடைய பெயர், முகவரி, இடம் என்ற வரிசையில் அடுத்த வரிசை அமையும். இறுதியாக வெளியான ஆண்டு அமைதல் வேண்டும்.

261.

சொல்லடைவு

சுவடிப் பதிப்பானது மூலம் மட்டும் கொண்டதாயின் அருஞ் சொற்பொருள் அகரநிரலும், உரையோடு கூடியதாயின் அருஞ் சொல் அகரநிரலும் நூலில் இடம்பெறும். இவ்அகராதி அதனைப் பயன்படுத்துவோரின் பல்லேறு தேவைகளை நிறைவு செய்வ தாகும். நூலில் சாணும் வெறும் சொற்கள் மட்டுமன்றி, சொற் பொருளும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இலக்கணக் குறிப்பு, உவமை. மெய்ப்பாடு, குறிப்பு ஆகிய இலக்கியக் கூறுகள், துறைக்குறிப்பு ஆகிய பலவும் செறிந்தமைவதே சிறந்த சொல்லடைவு ஆகும்.

சொல்லடைவின் அமைப்பு : அமைப்பு: மூலம், உரை, விளக்கவுரை, இலக்கணக் குறிப்பு ஆகிய அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சொற் களைத் திரட்டவேண்டும். அவற்றை முறைப்படுத்துவதற்குரிய வகையினை ஒரு சானறினால் விளக்கலாம்.

குறுந்தொகை, பதின்மூன்றாம் பாடலுக்குரிய சொல்லடை- வினை உ.வே.சா. பதிப்பின் அடிப்படையில் காணலாம். ஐந்து அடிகளை உடைய இப்பாடலிலிருந்து மாசு, யானை, உழத்தல், இருமை, பைதல், தலை, நாடன், சேக்கும், நோய், பசப்பு, குவளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/265&oldid=1571349" இலிருந்து மீள்விக்கப்பட்டது