உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

சுவடி இயல் என்னும் பதினோரு சொற்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. பெரும், பிணர், கழிஇய என்ற சொற்கள் தொடரமைப்பிற்காக எடுத்துக் கொள்ளப் பெற்றுள்ளன. 'பெரும் பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல்' என்ற அடிக்கு, பெரும்பெயல்,

6 5

பெயல்

உழந்த,பெயல் உழந்த, பெயல் உழந்த துறுகல், இரும்பிணர்த் துறுகல் பிணர்த் துறுகல், துறுகல் என்று பகுத்துத் தரப்பட்டுள்ளது. இது சங்க இலக்கியத் தொடர்நிலையை மனத்திற் கொண்டு பகுத்துக் காட்டப்பட்டதாகும் என்பர் குளோரியா சுந்தரமதி. இவ்வாறு அரியசொற்கள் அனைத்தையும் சொல்லின் அடிப்படையில் பிரித்துத் தொகுத்துக் கொள்ள வேண்டும். ள்ளிய சொற்களை அவசியமில்லை என்று விட்டுவிடுதல் கூடாது. அவையே சுட்டி அறியப் பயன்படுவன.

டம்

சொல்லடைவின் பயன் : ஒரு நூலில் ஒரு பாட்டின் முதற் குறிப்பு நினைவுக்கு வரவில்லை; ஆனால் அப்பாட்டில் உள்ள ஓர் அரிய சொல் அல்லது தொடர் நினைவில் இருக்கிறது என்றால் அந்தச் சொல்லைச் சொல்லடைவில் கண்டு அப்பாடலின் எண்ணை அறியலாம். சொல்லாய்வு செய்வோர், கட்டுரை எழுதுவோர் ஆ கியோருக்கு அவருடைய ஆய்வுக்குரிய சொல்லும், கட்டுரைக் குரிய சொற்களும் அந்த நூலில் எந்தெந்தப் பாடலில் அமைந் துள்ளன என்பதை எளிமையாகக் காணலாம். இது கற்போருக்குப் பயன்படும் எளிய முறை.

சொல்லடைவு தயாரிப்பதன்வழி பதிப்பாசிரியர்

நூலில்

ஒரு

ஆழ்ந்த அனுபவத்தைப் பெறுகிறார். எனவே பதிப்பாசிரியர் சுவடியிலிருந்து தூய படி எடுத்து முடிந்தவுடன் சொல்லகராதிக் குரிய சொற்களைத் தொகுத்துவிட வேண்டும். பிறகு குறிப்புரை, விளக்க உரைகள் எழுதலாம். குறிப்புரை எழுதும்போது சொல் எந்தெந்த பாடலில் வருகிறது என்பதை அறிவதால் முதலில் வந்தவிடத்தில் விளக்கம் கொடுத்து, அடுத்த பாடல்களில் முன் எண்ணைக் கொடுத்து, அதன் விளக்க உரை காண்க என்று எளிமையாகக் கூறிவிடலாம். அதே நூலில் ஒப்புமைப் பகுதி களைச் சுட்டவும் சொல்லடைவு பயன்படுகிறது. சொற்களைத் திரட்டும் பணிக்காக நூலை ஒருமுறை ஆழ்ந்து படிக்க வேண்டி யுள்ளது. அதனால் நூலின் பொருள் முழுமையாக உணரப்படு கிறது. முன்பின் உள்ள கருத்துகளைத் தொடர்புபடுத்தி விளக்கம் தரவியலும். பாடவேறுபாடு முதலான அடிக்குறிப்புகளைத்

55. டாக்டர் உ.வே.சா. சங்க இலக்கியப் பதிப்புகள், பக். 94.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/266&oldid=1571350" இலிருந்து மீள்விக்கப்பட்டது