உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை தரவும்

251

த்தொகுப்பு மிகுதியாகப் பயன்படும். இவ்வாறு பல்லாற் றானும் பதிப்பாசிரியருக்கும் ஆய்வாளருக்கும் மிகுதியாகப் பயன் ஆகும். நூலுக்கான ஆய்வுரையில்,

படுவது சொல்லடைவு பிறமொழிச் சொற்கள், கொச்சைச் சொற்கள், தலைவன் முதலானோர் பெயர்கள், நாடு, ஊர் ஆகியவற்றின் ஆகியவற்றின் பெயர்கள் ஆகிய சிறப்பு அகரநிரல்களைத் தனித்தனியே தொகுத்து அமைக் கவும் சொல்லடைவு பயன்படுகிறது.

'இலக்கிய ஆசிரியரின் சொற்பிரயோகங்களையும் ஊன்றிக் கவனிக்க வேண்டும். இதற்குச் சொல்லடைவு ஒன்று மிகவும் துணைசெய்யும்’6 8

என்னும் வி. ஐ. சுப்பிரமணியம் அவர்களின் கருத்தை நோக்க, ஆசிரியர் காலத்திய சொல்லாட்சியை அறியப் பயன்படுவது சொல்லடைவு என்பது புலனாகும். காலத்தை அறியவும் அது பயன்படுகிறது.

6T. ஆய்வு முன்னுரை

அச்சொல்லாட்சிக்குரிய

சுவடிப் பதிப்பினைச் சிறந்த ஆராய்ச்சிப் பதிப்பாக வெளி யிடுவது இன்றைய பதிப்பாசிரியரின் கடமையாகும், நூலினுள் கொடுக்கப் பெறும் விளக்கவுரை, ஒப்புமை ஆகிய பலவகை விளக்கங்களோடு நூலைப் பற்றிய ஆய்வு முன்னுரையினை அமைப்பது பயனுடைய பதிப்பாகிறது. பதிப்பில் சொல்லடைவு இறுதியாக அனைத்துப் பணிகளும் முடிந்த பிறகு ஆய்வு முன்னுரை எழுதத் தொடங்கவேண்டும். நூலை முழுமையாக உணர்ந்துள்ள காலம் அதுவே ஆதலின் ஆய்வு முன்னுரை விரைவாகவும் முழுமை யாகவும் அமையும்.

ஆய்வு முன்னுரையின் இன்றியமையாமை : ஆக்கியோன் வரலாறு முதலாக நூலின் சிறப்புகள் அனைத்தும் ஆய்ந்து சொல்லப்படுவது இம்முன்னுரை யாதலின் பொதுவாக யாவரையும் கற்கத் தூண்டுவது முன்னுரை எனலாம். ஆக்கியோன் சிறப் பாலும், நூற்பொருள் தன்மையாலும் கற்க விரும்புவோர் பலராவர். நூலுக்கு அழகையும் சிறப்பையும் தருவது முன்னுரை. எனவே நூலுக்கு முன்னுரை இன்றியமையாததாகிறது. இம் முன்னுரை, கற்போரை நூலுக்குள் ஆற்றுப்படுத்துவதாக

எனவே

56.

கில கட்டுரைகள், பக். 130.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/267&oldid=1571351" இலிருந்து மீள்விக்கப்பட்டது