உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

அமையவேண்டும்.

அதற்குத் துணையாக

சுவடி யல்

நூலின் தனிப் பண்பு களைப் புலப்படுத்த வேண்டும்; நூலுள் காணப்பெறும் சிக்கல் களைத் தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டும்.

ஆய்வு முன்னுரையில் சுட்டப்பெறுவன : கீழே தொகுத்துக் காட்டப்பெறும் வகை முதலான செய்திகள் முன்னுரையில் இடம் பெறுகின்றன. அத்தொகுப்புச் செய்திகள் நூலைக் கற்கத் தூண்டுவனவாக அமைவதோடு, நூலின் ஆழ்ந்த பொருள்களை நுணுகிக் காணவும் வழி வகுத்துக் காட்டுகின்றன.

வகை: முதல்நூல், வழிநூல் என்னும் வகைகளுள் பதிப்பிக் கும் நூல் எவ்வசையைச் சார்ந்தது என்பதைக் காரணங்காட்டி விளக்குதல் வேண்டும். சிலப்பதிகார ஆய்வுரையில் அதனை முதல் நூல் என்று சுட்டலாம். நிகழ்ந்த வரலாற்றைக் கண்டும், கேட்டும் அவ்வரலாற்றை நூலாகச் செய்தார் இளங்கோவடிகள் ஆதலின் அது முதல் நூலாயிற்று. வழிநூலாயின முதல் நூலினும் இது எவ்வெவ்வாறு விகற்பம் பெற்றுள்ளது? தொகுத்துக் கூறப் பட்டதா? விரிவுடைய நூலா? தொகை விரியாய் அமைந்ததா? மொழிபெயர்ப்பா? என்னும தன்மைகளையும் சுட்டவேண்டும்.

பயன் : நூலாலாம் பயன்களுள் அறம், பொருள், ஆகியவற்றைச்

இன்பம்

சுட்டிக்காட்டி, நூலில் அமைந்த மிகுதிப் பொ ருளால் ஆம் பயனை எடுத்துக் காட்டலாம்.

கொள்க படுப்பாசி?யர் ஆழ்ந்து காணும் நூலின் கொள்கை களால் நூலின டெருமையும், நூலாசிரியரின சிறபபும் உலகிற்கு எடுத்துக் காட்டப்பெற வேண்டும், அவற்றுள் நூலாசிரியர் கூறும் கருத்து பிறநூல், பிறமொழி, உலக வழக்கு, சமுதாய வழக்கு அரசியற் கொள்கை ஆசியவற்றிறகு உடன்பட்டு அமைகிறதா? காரண காரியங்களே டு மறுதலையாக அமைகிறதா? என்பனவற் றைச் சுட்டிக் காட்டி அதன் பயன்பாட்டினை எடுத்துக்காட்டலாம்.

பிற நூலாசிரியர் சருத்து ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு, இன்ன காரணத்தால் அதில் சில மாற்றங்கள் உண்டு என்பதாகக் கூறுவாராயின் அதனை நுணுகி ஆய்ந்து சுட்டலாம். மீண்டும் மீண்டும் கூறுவதாக அடையும் சில கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்து அது நூலாசிரியரின புதிய படைப்பு; அது ஆங்காங்கு சுட்டப்படுகிறது எனற உணமையை எடுத்துக் காட்டலாம் வழக்கில் இருக்கும் இருபெரும் கருத்துகளைச் சீர்தூக்கி, ஒன்றினைத துணிந்து கூறும் ஆசிரியர் கொள்கையை ஆய்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/268&oldid=1571352" இலிருந்து மீள்விக்கப்பட்டது