உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

253

வெளிப்படுத்தலாம். பிறருடைய கருத்துகளில் உள்ள குற்றங்களை எடுத்துக்காட்டும் பகுதிகளிருப்பின் அவற்றின் வன்மை, மென்மை களை உலகிற்குக் காட்டலாம். பிற கருத்துகளோடு சேராத, ஆசிரி யரின் தனித்தன்மைகளை எடுத்துக் காட்டலாம். இவ்வாறான பல திறக் கொள்கைகளை நூலினின்றும் எடுத்துக் காட்டுவது ஆய்வு முன்னுரையில் சிறப்பாக அமைய வேண்டிய பகுதியாகும்.

சிறப்பும் குற்றமும் : சொல்லப்புகுந்த செய்திகளைச் சுருக்க மாகச் சொல்லி நன்கு விளங்குமாறு அமைக்குந் திறம், இடத்திற்கு ஏற்ற சொற்களை ஆண்டுள்ள வன்மை ஆகியவற்றை நுணுகி ஆய்ந்து எடுத்துக் காட்டலாம். செய்யுள் வகைகளைப் பொருளொடு பொருந்தத் தேர்ந்து கூறும் பாங்கினைச் சுட்டி. அவை வெறும் ஓசையோடு மட்டும் பொருந்தாமல் பொருளாழமுடைய தாய் இருத்தலை வகைப்படுத்திக் காட்டலாம். கருத்துகளை ஆற்றொ ழுக்காக வைக்குமாற்றினைத் தொடர்புபடுத்திக் காட்டுவதால் நூலின் முழுமையைப் புலப்படுத்த முடியும். ஏற்புடைய கருத்துக்கள் உயர்ந்த கருத்துகள் ஆகியவற்றைப் பகுத்துக் காட்டி, எடுத்தாண் டுள்ள சான்றுகள், ஆசிரியர்,அவரது காலம், அக்காலச் சூழல் ஆகிய வற்றோடு பொருந்துமாற்றினை ஆய்ந்து கூறலாம்.

இச் சிறப்புக்களைக் காணுங்கால் தொட்டுக் காட்டி விளங்காது விட்டவற்றையும் மிகைபடக் கூறியவற்றையும் பிரித்துக் காட்டவும் தவறக் கூடாது. ஓரிடத்துக் கூறிய கொள்கை மற்றோரிடத்து மாறு படுவதாக அமைந்திருப்பினும் கூறியதையே காரணமின்றி பலவிடத் துக் கூறியிருப்பினும் அவற்றைத் தொகுத்துக் காட்ட வேண்டும். சிறப்புடைய சொற்களை விட்டு வேறு சொற்களையும், பயனற்ற சொற்களையும் ஆண்டுள்ள தன்மை, எடுத்துக்கொண்ட கருத்தை விட்டு வேறு கருத்துக்களை விரித்துக் கூறியுள்ள செயல் ஆகியவற் றையும் சுட்டலாம். இச்செயல் குறை கூறுவதாக அமையாது; பிறருக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியதாகும்.

உத்திகள் : நூலாசிரியர் கையாண்டுள்ள நூலுக்கான சிறந்த உத்திகளைச் சுட்டிக் காட்டுவது பயனுடையதாகும். இவ்வுக்தி பல திறத்தான் அமையும். ஆயினும சிலவற்றை இங்குச் சுட்டிக் காட்ட லாம். நூலில் காணும் இயல் பொருத்தங்களைத் தொடர்புபடுத்திக் காட்டுவது நூலின் முழு அமைப்பைச் சுட்டுவதாக அமையும். முன்பு கூறிய கருத்துத் தொடர்பினைப் போன்றதே இனி இயல் வைப்பு னி முறை எனலாம். தொகுத்தும் வகுத்தும் முறைப்படுத்தியுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/269&oldid=1571353" இலிருந்து மீள்விக்கப்பட்டது