உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

சுவடி இயல்

அமைப்பு, பிறநூல் தொடர்புகளைத் தம் நூலுள் எடுத்தாளும் பண்பு, மேற்கோளாகச் சுட்டும் தன்மை. இரட்டுற மொழிதல் முதலான பொருள்நுட்பம் ஆகியபலவகை உத்திகளை ஆய்வுரையில் எடுத்துக் காட்டி விளக்குவது இன்றியமையாததாகும்.

சொல்லாய்வு: இலக்கணமுடையது, உலக வழக்குடையது அவ்வக் காலத்திற்குரியது, அவ்வட்டாரத்திற்குரியது, பிறமொழிச் சொல் என்னும் பல்லாற்றானும் சிறப்புடைச் தொகுத்துக் க் காட்டுவதன்மூலம் நூலாசிரியரின் எடுத்துக்காட்ட இயலும்.

சொற்களைத் கொள்கையை

நூலாசிரியர், அகச்சான்று, புறச்சான்றுகளைப் பயன்படுத்தி நூலாசிரியர் வரலாற்றை உறுதிப்படுத்த வேண்டும். நூலாசிரியரின் பெருமைகள் நூலின் பெருமையை உயர்த்தும்; பலரையும் படிக்கத் தூண்டும். உரையிருப்பின் உரையாசிரியர் வரலாற்றையும் கொடுக்க வேண்டும்.

நூற்பெயர் : இடுகுறியாயினும் காரணப் பெயராயினும் நூலின் பெயருக்குரிய சொற்பொருள் விளக்கங்களோடு நூற் பெயரை எடுத்துக் காட்டுதல் வேண்டும். முதனூலின் பெயராலேயே வழிநூலும் நடைபெறுமாயின் முதல்நூலால் பெயர் பெற்றது என்பர். இதேபோல நூலாசிரியர், நூலின் அளவு, நூலில் காணும் மிகுதியான பொருள், நூற்பொருள், நூலின் தன்மை காரணங்களால் பெயர் பெற்றிருப்பின் சுட்டிக் காட்டலாம்.

ஆகிய

காலம் நூலின் கருத்துகளை முழுமையாக அறிந்துகொள்ளக் கால ஆராய்ச்சி பெருந்துணையாகிறது. இலக்கிய வரலாற்றை முறைப்படுத்தக் கால ஆய்வு தேவைப்படுகிறது. இலக்கியச் சான்று களால் நிறுவப்படும் நாட்டு வரலாற்றுக்குத் துணைபுரிவது கால ஆராய்ச்சி. மொழி வரலாற்றை வரையறை செய்யவும் கால ஆய்வு பயன்படுகிறது. எனவே நூலின் காலத்தைத் தக்க சான்றுகளுடன் ஆய்ந்து கூறுவது பதிப்பாசிரியரின் கடமையாகும்.

காரணம் : நூல் தோன்றவும் உரை வகுக்கவும் சில தூண்டு தல்கள் நிகழ்ந்திருக்கக் கூடும். அவ்வாறாயின் அவற்றைக் கண்டு தெளிவுபடுத்த வேண்டுவது வரலாற்றுக்கு இன்றியமையாததாகும்

ஆய்வு முன்னுரைக்குச் சில சான்றுகள் : சொல்லாய்வுக்குச் சான்று :

'திருவாங்கோடு என்பது எதன் திரிபு என்று அறிதல் வேண்டும். ஒரு சாரார் இது 'திருவாழுங்கோடு' என்பதன் திரிபாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/270&oldid=1571354" இலிருந்து மீள்விக்கப்பட்டது