உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

255

இருத்தல் வேண்டும் என்பர். திருவாழுங்கோடு என்பதற்குப் பழைய நூல் வழக்கு இல்லையென்பது மிக்க வன்மையுள்ள ஓரு தடையாகும்.

ஆகவே

திருவாங்கோடு என்பதனைத் 'திருவிதாங்கோடு' எனச் சிலவிடங்களிலும், திருவதாங்கோடு எனச் சிலவிடங்களிலும் வழங்குகின்றனர்... திருவதாங்கோடு என்பதில் 'திரு' என்ற அடைமொழியை நீக்கினால் எஞ்சியுள்ள பெயர் 'அதங்கோடு'. இப்பெயருடைய ஓரூர் உளதாகவும் அறிகிறோம். அதங்கோட்டாசான் என்பவர் திருவாங்கோடு அல்லது அதங் கோடு என்று இன்று வழங்கும் ஊரினர் என்று கொள்ளலாம். தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் அதங்கோடு என்ற பெயருடைய ஊர் வேறொன்று இருப்பதாகத் தெரியவில்லை என்பதும்

இங்கே குறிக்கத்தக்கது57

என்னும் எஸ். வையாபுரிப்பிள்ளையின் ஆய்வு முடிவு ஊர்ப்பெயர் முதலானவற்றை ஆய்ந்து தெளிவான முடிவைத் தருவதற்கு வழி காட்டியாய் அமைகிறது.

சில உண்மை காண்பதற்குச் சான்று

"சிறப்புப் பெயர்களாக அமைந்துள்ள புலவர் பெயர் களைக் கொண்டு ஆராய்ந்தால் எட்டுத்தொகையில் முதலில் தொகுக்கப் பட்ட நூல் குறுந்தொகை என்பது தெரியவரும். காக்கைப்பாடினியார் நச்செள்ளையா ரென்பது ஒரு புலவர் பெயர். அவருடைய இயற்பெயர் நச்செள்ளையாரென்பது. விருந்துவரக் கரைந்த காக்கையைப் பாராட்டினமையின் காக்கை பாடினியார் நச்செள்ளையார் எனக் குறிக்கப்பட்டார். அப்பால் தொகுக்கப்பட்ட நூல்களில் அவ்வாறே வழங்கப் பட்டார். கள்ளிலாத்திரையனார், ஓரேருழவர் என்னும் பெயர் களும் குறுந்தொகைப் பாடல்களால் பெயர் பெற்றுப் பின் புறநானூறு போன்றவற்றில் இதே பெயர்கள் குறிக்கப் படுகின்றன, பிற நூல்களில் இவ்வாறு பெற்ற பெயர்களுள் ஒன்றேனும் குறுந்தொகையில் வரவில்லை* ’5 8

என்னும் உ.வே.சா.வின் முடிவுகள் எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட வரலாற்றுக்குச் சிறந்த சான்றாகி, இத்தகு

வரலாறு காண வழிகாட்டுகின்றன.

57. தமிழ்ச் சுடர்மணிகள். பக். 18.

58.

குறுந்தொகை, முகவுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/271&oldid=1571355" இலிருந்து மீள்விக்கப்பட்டது