உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

சுவடி இயல் "பரத கண்டத்தில் வழங்கும் பாஷைகளுள் ஆதிகாலந் தொட் டுள்ளன சமஸ்கிருதமும் தமிழுமாம்"

என்று தொடங்கி தமிழ்மொழியின் தொன்மைக்குப் பல சான்று களைக் காட்டி, அது உயர்தனிச் செம்மொழி என்பதை நிறுவு கிறார். சி.வை.தாமோதரம் பிள்ளை. இது து பல பக்கங்களைக் கொண்டது. அபோத காலந் தொடங்கி, இந்நூலின் காலம் என்பது முடிய பல வகையில் ஆய்ந்து வீரசோழியத்தின் காலத்தை நிறுவுகிறார். இவ்வாறு மிகப் பரந்துபட்ட ஆய்வு முன்னுரையின் மூலம் பல பொருள்களையும் நிறுவ வழிகாட்டுகிறது வீரசோழியப் பதிப்புரை.

60

புறநிலைக்குச் சான்று: கீழ்க்கணக்கு நூல்களுக்குப் பல்லாறு ஆய்ந்து விளக்கம் தந்துள்ள சி. வை. ST.° தமது இலக்கண விளக்கப் பதிப்புரையில், கலித்தொகை பதிப்பித்த பின் திணை பற்றிய நான்கு நூல்களும் எனக்குக் கிடைத்தன; ஐந்திணை பற்றி நான் கூறியவை தவறு என்று ஒப்புக் கொள்ளுகிறேன் என்றும் குறிப்பிடுகிறார். நேர்மைக்குச் சான்றாகிய இது பதிப்பாசிரியருக்கு ஒரு வழிகாட்டியாகிறது. தவறு நிகழாவண்ணம் கொள்ளவும் உதவுகிறது.

காத்துக்

கலித்தொகையில் வடமொழி மணமே இல்லை; இதுபோன்றே நற்றிணை முதல் புறநானூறு ஈறான அனைத்தும் வடமொழி மணமற்றன. இந்நிலை இருக்க, ஈசான தேசிகர், 'ஒன்றே யாயினும் தனித் தமிழுண்டோ' என்றார். இந்நூல்கள் அவர் கைக்குக் கிட்டாமையே காரணம் என்பது போன்ற புறநிலை ஆய்வுகள் பல சி. வை. தா. வால் கொடுக்கப்பட்டவை.

81

பொருட் பாகுபாட்டிற்குச் சான்று : உ.வே.சா.வின் பத்துப் பாட்டு முகவுரை, கீழ்க்கண்ட பொருட் பாகுபாட்டில் அமைகிறது. இந்நூல் நக்கீரர் முதலியோரால் பாடப்பெற்றது; சங்கப் புலவர் களால் தொகுக்கப் பெற்றது (மலைபடு - 145.நச்சர்); தமிழுக்கே உரிய ஒழுக்கம், நிலம், பொழுது இவற்றைக் காட்டி இன்பம் பயப்பது; தமிழ் மன்னர், மக்கள் ஆகியோரின் சிறப்புகளை விளக்குவது; முன்னோர் மொழி பொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவது; அடியளவு, பாடியோர், பாடப் பட்டோர், துறை, கூற்று, செய்திகள் ஆகியவற்றின் தெளிவை

59.

வீரசோழியம், பதிப்புரை. 60, கலித்தொகை, பதிப்புரை. 61. மேற்படி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/272&oldid=1571356" இலிருந்து மீள்விக்கப்பட்டது