உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

உட்கொண்டது

து என்பன

257

போன்ற பல பொருட்பாகுபாடுகள், பத்துப்பாட்டின் நூல்வாரியாக அமைவது பிற பதிப்பாசிரியருக்கு வழிகாட்டியாகிறது.

எனவே நூலின்

ஆய்வுநிலை - அகநிலை ஆய்வு : ஆய்வு முன்னுரைக்குத் துணைநிற்பன பல; பதிப்பிக்கும் நூல் மட்டுமன்று. ஆய்வு நிலையினை இரண்டு வகையாகக் கொள்ளலாம். வகையாகக் கொள்ளலாம். உட்செய்திகளைத் திரட்டி, சொற்கள்முதல் அணிகள் ஈறாக ஆய்வது 'அகநிலை ஆய்வு' எனக் கொள்ளலாம். இதற்குப் பதிப்பிக்கும் நூலுக்கான மூலச்சுவடியுடன் ஒப்பிடும் பிற சுவடி களும் துணையாகின்றன. அவற்றோடு பழைய அச்சு நூல்களும் துணைபுரிவனவாகும். அந்த அந்த அச்சு நூல்களும் சில சுவடிகளைக் கொண்டு பதிப்பிக்கப்பட்டவை ஆதலின் அவையும் பழைய சுவடி களாகவே கருதப்படலாம். அப் பதிப்பாசிரியரின் முறையும் துணைபுரியும்.

.

புறநிலை ஆய்வு: தமிழ் மொழியிலுள்ள பிறநூல்களோடு ஒப்பிட்டு அப்பகுதிகள் யாவற்றையும் ஆய்வது 'ஒருமொழி ஒப்பீட்டு ஆய்வு' என்னும் புறநிலை ஆய்வாகக் கொள்ளப்படும். தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம்... போன்ற பிறமொழி நூல் களோடு ஒப்பிட்டு ஆய்வது 'பன்மொழி ஒப்பீட்டு ஆய்வு' என்னும் புறநிலை ஆய்வாகும். புறநிலை ஆய்வில் நூல் வடிவ அமைப்பு முதல் (பா, உரைநடை) பொருட்பாகுபாட்டுச் சிறப்பு ஈறாக அனைத்துச் செய்திகளும் எடுத்துக் கொள்ளப்படும். உடன்பாட்டு முறையிலும் எதிர்மறை முறையிலும் ஒப்பிடப்பட்டு, ஒற்றுமை, வேற்றுமைகள் புலப்படுத்தப்படுவது ஆய்வு நெறியாகும்.

.

ஆய்வு

பதிப்புரை: படிப்போருக்கு நூலை படிப்போருக்கு நூலை எளிமையாக்கித் தந்து, பதிப்பின் தரத்தை மதிப்பிடும் ரைகல்லாக அமைவது அமைவது முன்னுரை. ஆனால் பதிப்பின் உழைப்பையும், பதிப்பு வரலாற்றையும் அறிந்து வியக்கச் செய்வது பதிப்புரை. பதிப்புக்குப் பயன்பட்ட மூலச்சுவடி. ஒப்புநோக்கப் பயன்பட்ட சுவடிகள். அச்சுநூல்கள் ஆகியவற்றின் முழு விவரங்களையும் பதிப்புரையில் குறிப்பிட வேண்டும். சுவடிகளைப் பெற்ற வரலாறு. அவற்றின் காலம் ஆகியவற்றை விளக்கி வரிசைப்படுத்திக் கையாண்ட முறையினைக் கூறவேண்டும். மொத்தமாகப் பாடல் எண்ணிக் கையில் இருந்த வேறுபாடுகள், அவற்றைச் சரிசெய்த முறை, உரையில் காணப்பட்ட வேறுபாடுகள், அவற்றைப் பதிப்பித்த

சுவ. -17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/273&oldid=1571357" இலிருந்து மீள்விக்கப்பட்டது