உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

சுவடி இயல் முறை ஆகியவற்றைத் தெளிவாகக் காட்டவேண்டும். பாடவேறு பாடுகளைத் தொகுத்த முறையினைச் சுட்டுவதனால் பிற பதிப் பாசிரியருக்குத் துணைபுரிய வழி உண்டு. அதேபோல மூல பாடத்தைத் தேர்ந்தெடுக்கக் கையாண்ட உத்திகளைக் காரண காரியங்களோடு முழுமையாகத் தொகுத்துக் காட்டுவதன் மூலம் தம் அனுபவத்தைப் பிறரும் பெறுமாறு செய்யலாம். அதுவன்றி, நாம் மேற்கொண்ட காரண காரியங்கள் சரியானவையா என்பதை ஆய்வாளர்கள் சிந்திக்குமாறு தூண்டுவதாகவும் அவை அமையும். முன்பதிப்புகள் இருப்பின் அவற்றின் குறை நிறைகளைச் சுட்டி, இப்பதிப்பில் அமைந்த வேறுபாடுகளை எடுத்துக் காட்டலாம். மூலபாடங்களில் திருத்தங்கள் செய்திருந்தால் விவரங்களைத் தொகுத்தளிக்க வேண்டும். இச்செய்திகளடங்கிய பதிப்புரை,

பதிப்பின் வரலாற்றுக்கு உறுதியான சான்று பகர்வதாகும்.

அணிந்துரை முதலியன : "தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும், தான்தற் புகழ்தல் தகுதி யன்றே"" என்பது சிறப்புப் பாயிரம். நூலாசிரியரைத் தவிர பிறரால் செய்யப்பட வேண்டும் என்பதற்குக் கூறப்பட்ட காரணம் ஆகும். நூலின் சிறப்பியல்பு களையும், நூலாசிரியரின் உயர்ந்த குறிக்கோளையும் உலகிற்கு எடுத்துக்காட்டி நூலை அறிமுகப்படுத்த உதவுவது அணிந்துரை, பிறவுரை, தந்துரை என்னும் பெயர்களால் அமையும் சிறப்புரை யாகும். இது சான்றோர் பிறரால் செய்யப்படுவது ஆகும். அமைந்த துறையில் உலகறிந்த சான்றோரால் அச்சிறப்புரை அளிக்கப்படுமாயின் நூலைக் கற்போர் மிகுதியாவர்; நூல் வெளி யிட்டதன் முழுப்பயன் கிட்டும். பதிப்பாசிரியர் சிறந்த சான்றோரைத் தேர்ந்து இச்சிறப்புரையைப் பெறுவது நூலை மக்களிடையே பரப்புவதற்குரிய வழிகளுள் ஒன்றாக அமையும்.

நூல்

சுவடிப் பதிப்பில் நூலாசிரியர் அணிந்துரை எழுதும் நிலைக்கு இடம் இருக்காது. பதிப்பாசிரியரே இடம்பெறுகிறார். அவர் நூலின் சிறப்பியல்புகளைத் தம் ஆய்வுரையில் தருகிறார். ச்சிறப்புரைக்குப் பிறரைத் தேர்ந்தெடுப்பது தேவையாகிறது.

ஏ. பதிப்புரை - பொதுக் கொள்கைகள்

எனவே

தலைப்பு கொடுத்தல்: அச்சுப்படி தயாரிப்பதன் முறைகள் கூறப்பட்டன. அவ்வாறு தயாரிக்கும்போது நூல் அமைப்பில் சில கருத்துக்களைப் பதிப்பாசிரியர் உளங்கொள்ள வேண்டும். அதாவது 62. நன்னூல். 52.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/274&oldid=1571358" இலிருந்து மீள்விக்கப்பட்டது