உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

சுவடி இயல் படும். நூலைப் படிப்பதில் சலிப்பு ஏற்படும். மேலும் சுவடியில் உள்ள வடிவம் என்பது மேலும் பொருளை ஆழ்ந்து, ஆய்ந்தறிய விரும்பும் ஆய்வாளருக்கும், காலந்தோறும் மாறுபட்ட எழுத்து வடிவை ஆய்வுசெய்ய விரும்பும் ஆய்வாளருக்கும் மட்டும் பயன் படுவதாகும். நூலைப் படித்துப் பொருளை அறிந்து பயன்படுத்த விரும்பும் சாதாரண மக்களுக்கு இம்முறை தேவையற்றதாகும். ஆய்வாளரும் முதலில் செய்தியைத் தெளிவாக அறிந்துகொள்ளவே விரும்புவர். பிறகே பிறகே ஆய்வினை நிகழ்த்துவர். திருத்தமில்லாத பதிப்பு ஆய்வாளருக்கும் பயன்படாமல் போவதும் உண்டு. காரணம் பொருள் விளங்காமையே; அதாவது திருத்திப் படிக்க இயலாமையே. அனைவருக்கும் பயன்படும் வகையில் பதிப்பினைத் திருத்தி அமைத்து, சுவடி வடிவத்தை அடிக்குறிப்பில் தருவது இரண்டாவது முறையாகும். இதுவே பயனுள்ள முறையு மாகும். இம்முறை சுவடியைத் திருத்திப் பதிப்பித்ததாகக் கருதக் கூடியதன்று. சுவடி வடிவத்தை உள்ளடக்கிய திருத்தப் பதிப்பு முறையேயாகும்.

எனவே

"முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும் பொன்னேபோல் போற்றுவர் பொற்புலவர் - அன்னோர் நடையிடையத் தம்வழியே நாட்டி மொழிமாற்றல் கடையிடையர் மாட்டுவினை காண்-என்னும் செய்யுளில் கூறியபடி சுவடிகளில் காண்பதைத் தம்மதத்தின்படி திருத்துதல் விபரீத அறிவினையுடைய மத்திமர்க்கும், சந்தேக ஞானத் தையுடைய அதமர்க்கும் உரிய தொழில் என்று உணர்க... அவர் நூலையே அச் சொரூபமாக எடுத்துப் பதிப்பிப்போர் ஓர் அக்ஷரமாவது மாற்றுதல் பெருந் தவறு என்பது யாருக்கும் உடன்பாடே. இக் கருத்துகளைக் காரண காரியங்களுடன் நன்கு அறிவோம். என்றாலும்... படியெடுப்போரால் பல பிழைகள் நேர்ந்துள்ளன என்பதையும் அறிவோம்... அத் திருத்தங்களினால் ஏதேனும் பொருள் மாற்றம் உண்டானால் கற்போர் அறிதல் கூடும் என்ற எண்ணத்தினால் இவ்வாறு திருத்தம் செய்த இடங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் தொகுத்து, பாட்டு எண் கொடுத்து- 'சுவடியில் உள்ள தொடர்- திருத்தம் செய்யப்பட்ட தொடர்' என்ற தலைப்பில் பதிப்பித் திருக்கிறேன்’"" 5

என்னும் பகுதி இங்கு நோக்கத் தக்கதாகும்.

66. மனை நூல் பதிப்புரை, பக். 34-36.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/276&oldid=1571360" இலிருந்து மீள்விக்கப்பட்டது