உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

261

தொடர் எண் கொடுத்தல் : பாடல், நூற்பா போன்றவற்றிற்கு வரிசை எண் கொடுப்பது இன்றியமையாதது. ஒரு நூலில் பல இயல்கள் அமைந்து, ஒவ்வொரு இயலும் பல பாடல்களை அல்லது பல அடிகளைக் கொண்டதாக அமையும். இவற்றுள் பாடல் களுக்குத் தொடர்ச்சியாக எண்களை அமைக்கலாம். ஆசிரியப்பா நடையிலான தொடர் அடிகளாயின் ஐந்து அல்லது பத்து அடிகளுக்கு ஒருமுறையாக, ஆனால் தொடர்ந்த அடி எண்களைத் தருதல் இன்றியமையாதது. எண் கொடுப்பதில் நூல் முழுமைக்கும் தொடர்ச்சியாக அமைவதே எடுத்தாள்வதற்கு எளிமையாக இருக்கும். இவ்வாறு இல்லாது இயல்கள்தோறும் ஒன்று, இரண்டு என்று தொடங்கித் தொடர் எண் கொடுக்கும். முறையும் காணப் படுகிறது.

சீர்மை செய்தல் : ஒரே சொல் சுவடிகளில் பலவிடங்களில் பலவாறாக எழுதப் பெற்றுள்ள நிலையும் காணப்படுகிறது. ஏதேனும் ஒரு முறையில் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அதே முறையில் அச்சொல்லை நூல் முழுவதிலும் கையாள வேண்டும். வேறுபட்ட தனித்த தலைப்பிலோ குறிப்பிட்டுக் காட்டலாம்.

அவ்வகைகளை

அடிக்குறிப்பிலோ

"பதிப்பாசிரியரின் கடமைகளுள் ஒன்று சொல், பொருள் போன்றவற்றில் சீர்மை அமையச் செய்தல். அதாவது ஒரு நூலுள் வரும் இராசராசன்' என்ற பெயரை நூல் முழுமையிலும் ஒரே மாதிரியாக அமைக்காமல் ராஜராஜன், இராஜராஜன், ராசராசன் என்பன போன்று மாற்றி மாற்றி அமைப்பது ஐயத்தை விளைவிப்பதாக அமைந்துவிடும். சுவடியுள் மாறுபாடாகக் காணின் சிறந்த ஒன்றைத் தேர்ந்து, பிறவற்றைச் சுட்டிக் காட்டிவிட வேண்டும் என்பதே ஒழுங்கு முறையாகும் 67

என்னும் கருத்து சீர்மை செய்தலை எடுத்துக் காட்டுகிறது. சீர்மையில்லாப் பதிப்புகளுக்குச் சிலவற்றை எடுத்துக் காட்டலாம். தமிழ்நாடு அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூல் நிலையம்' தமிழ்நாடு அரசு கீழ்த்திசை நூலகச் சுவடி’65 என்பன ஒரே நூலில் தலைப்புப் பக்கத்திலேயே காணப்படும் தொடர்களாகும், இந்தப் பதிப்புகளில் 'வம்சாவளி' என்பது நூல்

66

67. எண்பத்தொன்றில் தமிழ், பக்.489.

68. பாளையப்பட்டுகளின் வம்சாவளி, தொகுதி 1,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/277&oldid=1571361" இலிருந்து மீள்விக்கப்பட்டது