அ.
8. அச்சு
அச்சுமுறைகளைக் கண்காணித்தல்
நூலின் முழு அமைப்பினை மனத்திற்கொண்டு ஒவ்வொரு பகுதியும் கவனிக்கப் பெற வேண்டும். அந்தப் பகுதிகள் அச்சில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பதிப்பாசிரியர் முன் கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட வேண்டியவை எனச் சில வரன் முறைகளை வகுக்கலாம். இவ்வரன்முறை பதிப்பாசிரியருக்குப் பெருமை தரக்கூடியவை என்பதோடு, இவ்வரன்முறையோடு அமையும் நூல் எல்லாவகையிலும் பயனுடையதாய் விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நூலின் அமைப்பு
1. முன்புற, பின்புற மேலட்டைகள் 2. அட்டைஉறை
3. முன், பின் ஒட்டுத்தாள்கள்
4. சுருக்கத் தலைப்புத்தாள்
5. தலைப்புத்தாள்
6. தகவல் பட்டி
7, படையல்
8. முகப்புப்படம்
9. அறிமுக உரை
10. பதிப்பாளர் உரை 11. நன்றியுரை 12.பொருளடக்கம்
13. நூல் ஆய்வுரை 14. படப்பட்டியல் 15. சுருக்கக் குறிப்பு 16. குறியீட்டுப்பட்டி 17. பிழை திருத்தம் 18. நூல்
19. பின் இணைப்புகள் 20. நூல் தொகை
21. பிற அட்டவணைகள் 22. விளக்கப்படங்கள் 23. கலைச் சொற்கள் 24. செய்யுள் முதற்குறிப்பு 25. சொல்லடைவு