உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சு

265

இவற்றுள் அட்டைஉறை நூலின் அளவையும், பதிப்பாசிரியரின் விருப்பத்தையும் பொறுத்து அமைவதாகும். சுருக்கத்தலைப்புத் தாள் நூலுக்கு அழகைத் தருவது. படையலும் முகப்புப்படமும் விருப்பமாயின் இடம்பெறுதன. அறிமுகஉரை என்னும் பகுதியில் அணிந்துரை, சிறப்புரை, வாழ்த்துரை எனப் பலவாகவும் அமைய லாம். நூல் ஆய்வுரையில் நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு

நூலுள்

நூலின் காலம் ஆகிய அனைத்தும் இடம்பெறும். படங்கள் இருப்பின் மட்டுமே படப்பட்டியல் இடம்பெறும். பிழை திருத்தம் நூலின் இறுதியிலும் இடம் பெறலாம். கலைச்சொற்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அமைவதுண்டு. அதற்குப் பக்க எண் பாடல் எண்கள் அவசியமில்லை. தமிழ் தமிழ் அகரவரிசை அல்லது ஆங்கில அகரவரிசையில் அமைக்கலாம்.

நூலின் தலைப்பு : மேல் அட்டை, அட்டைஉறை, சுருக்கத் தலைப்புத்தாள், தலைப்புத்தாள் ஆகியவற்றில் நூலின்பெயர் ஒரே மாதிரியாக அமையவேண்டும். சுருக்கத்தலைப்புத்தாளில் நூலின் பெயர் மட்டும் இருக்கும். இவை ஒரே புள்ளி எழுத்தால் அச்சிடப் பெறும். அட்டைப் பகுதிக்குத் தனி அச்சு (பிளாக்) தயாரிக்கப்படு மானால் அது மட்டும் வேறுபடலாம். நூல் தொடங்கும் பக்கத்திலும் நூலின் தலைப்பு அமைதல் வேண்டும். அது அடுத்த சிறிய அளவு புள்ளியில் அச்சிடப்பெறும்.

பெயர் : தலைப்புத்தாள் போன்றவற்றில் ஆசிரியர் பெயர் முகவரி ஆகியற்றை அச்சிடும் போது சுருக்கப் பெயரை அடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; முழுப் பெயர்களாயின் புள்ளி வைக்கக் கூடாது. இம்முறை நூலினுள் காணப்பெறும் பெயர் காட்டிலும்

களுக்கும் பொருந்தும். இதனை விளக்குவதைக் சான்றுகளால் எடுத்துக் காட்டலாம்.

டாக்டர் குளோரியா சுந்தரமதி

டாக்டர் ச.வே.சுப்பிரமணியன்

புலவர் இராசேந்திரன்

புலவர் பூ. சுப்பிரமணியம்

என்பன சிறப்புப் பெயருடன் கூடிய பெயர்கள். இப்பெயர்களை அடுத்து ஈற்றில் புள்ளிகூடாது. தொடர்ந்து பட்டங்கள் எழுதப்பட வேண்டுமானால் காற்புள்ளியிட்டுத் தொடங்க வேண்டும்.

சுருக்கப் பெயர்கள்

கி.பி.மூன்றாம் நூற்றாண்டு;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/281&oldid=1571365" இலிருந்து மீள்விக்கப்பட்டது