உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

கி.மு. முதலாம் நூற்றாண்டு;

சுவடி இயல்

15 கி.மீ. தூரம்; 200 கி.கி. எடையுள்ளது என்பன போல - கி.பி., கி.மு.க்களுக்குப் பின்னால் எண்கள் வரவேண்டும். கி.மீ., கி.கி. ஆகியவற்றுக்கு முன் எண்கள் வரவேண்டும். '200 GOIT தொடரில் புள்ளி

எடையுள்ளது' என்ற முழுச் சொல்லையுடைய

எதுவும் வராது.

அதாவது

சுருக்கக் குறிப்புகளைச் சொற்றொடர் தொடக் கத்திலும், இயல் தொடக்கத்திலும் கையாளக் கூடாது. தலைப்பு : 'ஐக்கியநாடுகள் சபையின் பணிகள்' என்று எழுதலாம். ஐ.நா.சபையின் பணிகள்' என்று எழுதக் கூடாது. தலைப்புகளில் சுருக்கச்சொல் அமைவது, தலைப்பின் பொருளையே ஆழ்ந்து அறிய வேண்டியதாகிவிடும். வாக்கியத் தொடக்கத்தில் சுருக்கச்சொல் அமைவதனால் முதலிலேயே விட்டிசை ஏற்பட்டு விடுகிறது. எனவே இவை தவிர்க்கப்பட வேண்டியவை ஆகின்றன. ஐ. நா. சபை இந்தியப் பொருளாதாரத் திட்டத்தைப் பாராட்டியது என்று தொடங்க வேண்டிவந்தால், இந்தியப் பொருளாதாரத் திட்டத்தை ஐ.நா. சபை பாராட்டியது என்று எழுத வேண்டும். இது எல்லாச் சுருக்கக் குறிப்புகளுக்கும் பொருந்தும். சிறிய சொற்களுக்குச் சுருக்கம் கையாளக் கூடாது. (நாள். மைல், நாடு, ஏக்கர் என்பனவற்றை அப்படியே எழுதலாம்.) இதன் பொருள், என்றவாறு போன்றவற்றின் சுருக்கக் குறிப்புகள் முதலில் அமையலாம். இவ்வாறு சுவடியில் காணும் சில சுருக்கக் குறிப்புகள் கீழே தரப்படுகின்றன. இக்காலத்து இவை பயன்படுத் ஆயினும் சுவடியில் உள்ள இவற்றை அச்சில் கொண்டுவர வேண்டியுள்ளது. ஆதலின் இவை ங்கும் சுட்டப்

தப்படுவதில்லை.

பெறுகின்றன.

இ-ள். இதன் பொருள்

உ-ம்.

உதாரணம்

எ-டு.

எடுத்துக்காட்டு

எ-து.

என்பது

எ-ம்.

எ-று.

ப-ம்.

பொ-ரை

என்பதாம்

என்றவாறு

பக்கம்

பொழிப்புரை

ஆண்டு மாதம், தேதி-இவற்றின் சுருக்கக் குறிப்புகள் வற்றின் சுருக்கக் குறிப்புகள் இணைப்பில் காட்டப் பெற்றுள்ளன.

1985 ஆம் ஆண்டு என்பதே சரியானது. 1985-ம்; 1985-ஆம்; 1985 ஆவது என்பன தவறானவை. 1985இல் என்பது சரியானது. 1985ல்; 1685-ல் என்பன சரியல்ல. 5ஆம். 5இல் என்பன தொடர்ந்த ஓசை உடையவை. இடையே சிறு கோடு போட்டால் ஆம், இல் என்பன விட்டிசைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/282&oldid=1571366" இலிருந்து மீள்விக்கப்பட்டது