உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சு'

267

பக்கங்களில் தலைப்பு: ஒவ்வொரு பக்கமும் மேல்வரியில் நூலின் பெயர் ஒருபுறமும் இயல், கட்டுரை, நூற்பா எண் ஆகிய வற்றில் ஒன்று மற்றொரு புறமுமாக அமைவது பயன்பாட்டுக்குரிய அமைப்பாகும். 'யாப்பியல் ஆய்வுக் கோவை' என்னும் நூலினுள் பரிபாட்டு. மண்டிலயாப்பு, கலிப்பா, கலிவெண்பா... என ஏழு கட்டுரைகள் அமைகின்றன. ஒருபுறம் நூலின் பெயரும் மறுபுறம் அப்பக்கத்தில் உள்ள கட்டுரையின் தலைப்பும் இடம் பெறுவது முறை. ஆனால் நூல் முழுமையும் ஒருபக்கம் யாப்பியல் எனவும் அடுத்த பக்கம் ஆய்வுக்கோவை எனவும் அமைகிறது. கட்டுரைத் தலைப்புகளுக்கு வரிசை எண் கொடுப்பதும் இன்றியமையாத தாகும். மேற்குறிப்பிட்ட நூலில் பொருளடக்கத்தில் எண் உள்ளே உள்ள கட்டுரைத் தலைப்பு சுளுக்கு எண் இல்லை. எடுத்துக் காட்டப் பெற்ற நூல் சுவடிப் பதிப்பு இல்லை ஆயினும் - அச்சிட்டு வெளியிடும் பாங்கில் இரண்டும் ஒருதன்மையன வாதலின் இந்நூல் எடுத்துக் காட்டப் பெற்றது.

கொடுக்கப்பட்டுள்ளது.

அச்சுப்புள்ளி : ஆறு புள்ளி அளவுடைய சிறிய எழுத்து முதல் எழுபத்திரண்டு புள்ளியுடைய பெரிய எழுத்து ஈறாக எழுத்தின் அளவுகள் பலவகைப்படுகின்றன எழுத்தின் அளவுகளையே புள்ளி என்பர். ஆறுபுள்ளி எழுத்தை இக்காலத்தில் தமிழில் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுவரும் 'தமிழ்த்தலை' என்னும் இதழில் பொருளடக்கம் ஆறுபுள்ளியில் அச்சிடப் பெற்று வருகிறது. மிகப்பெரிய அளவுகள் விளம்பரச் சுவரொட்டிகளுக்குப் பயன்படுவனவாகும்.

பொருளும் புள்ளியும் : சுவடிப் பதிப்பில் பாடல்கள் பன்னிரண்டு புள்ளியிலும் உரை, விளக்கவுரை ஆகியவை பத்துப் புள்ளியிலும் அச்சிடப்பெறுமாயின் நூல் தெளிவாக இருக்கும். அடிக்குறிப்புகள் எட்டுப்புள்ளியில் அமையலாம். இவ்வமைப்பு களுக்கு ஏற்ப பாடல்களுக்கான பொருள்கலைப்பு, பத்தித் தலைப்பு, உள்தலைப்பு, இயல்தலைப்பு, கட்டுரைத் தலைப்பு, நூல் தலைப்பு ஆகியவை ஒன்றற்கொன்று இரண்டுபுள்ளி பெரியதாக அமைவதும் நூலின் தெளிவை உயர்த்தும். எந்த எழுத்து அளவைத் தேர்ந்தெடுப்பினும் ஒருவகையான தலைப்பிற்கு நூல் முழுமையும் அதே அளவு எழுத்தே அமையுமாறு கவனித்துக் கொள்ள வேண்டும். ஓர் இயல் தலைப்பிற்குப் பதினான்கு புள்ளி யுடைய எழுத்தைத் தேர்ந்தெடுத்தால் நூல் முழுமையும் இயல் தலைப்புகள் பதினான்கு புள்ளியிலேயே அமைய வேண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/283&oldid=1571367" இலிருந்து மீள்விக்கப்பட்டது