உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

போது, தம் சுவடியைக் கொடுத்துத் தம்

சுவடி இயல் மாணாக்கரைப் படி

எடுத்துக் கொள்ளச் செய்வார். ஆசிரியர் பலரும் இவ்வாறே மாணவரைப் படியெடுத்துக் கொள்ளச் செய்வர். சிதைந்துபட்ட

தம் சுவடிக்குப் பதிலாக வேறு ஒருபடி எழுதித்தரச் சொல்லுவதும் உண்டு.

இயற்கையாகவே ஓலைச் சுவடிகள் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழுது பட்டுப்போகும். அடிக்கடி எடுத்துப் பயன்படுத்துங்கால் மிக விரைவில் பழுதாகும். அவற்றைக் காக்க வேண்டி வேறு படிகள் எழுதப் பெற்றன. ஆயினும் மூலப்படிகளும் காப்பாற்றப் பெற்று வந்தன. இதனால் சுவடிகள் பெருகின.

ஊற்றுமலை சமீன்தார் போன்ற செல்வந்தர் தம் வீட்டுப் புத்தக சாலைக்காகவும். தருமபுரம், திருவாவடுதுறை முதலான மடங்களின் மடாதிபதியர் தங்கள் மடத்துச் சரஸ்வதி பண்டாரத் திற்காகவும் பிறரைப் படியெடுத்துக் கொடுக்கச் செய்து வாங்கி வைத்தனர். 68

66

திருநெல்வேலி,

தம்பாபிள்ளையன் அவர்கள் ஏடு பார்த்து எழுதின ஸ்ரீவைகுண்டம் சிவசங்கரம் பிள்ளை யவர்கள் ஏடு பார்த்து, இராமாயணம் திருவேங்கடம் எழுதுவித்து எழுதின ஏட்டின் படிக்கு முதற்புத்தகம் பிழை பார்த்து முடிந்தது.

296 4

என்னும் சுவடிக்கூற்று ஏடுகளின் பல தலைமுறைகளைக் சிட்டு மேலும் பிறர் வேண்டுகோளுக்காக ஏடுகள் படியெடுக்கப் பட்டன என்பதையும் புலப்படுத்துகின் றது.

கின்றது.

உரையாசிரியரால் வளர்ச்சி : உரையாசிரியர்கள் தோன்றி மூல நூல்களை ஆய்ந்து பல்வேறு வகையில் உரையெழுதி யளித்ததன் பயனாகவும் சுவடிகள் பல பெருகலாயின.

புதிய ஆக்கநிலையில் வளர்ச்சி : சமயச் சான்றோர்களும் புலவர் பெருமக்களும் அவ்வப்போது தோன்றிப் பல சமய நூல் களையும் இலக்கண, இலக்கிய, நிகண்டு நூல்களையும் ஆக்கித் தந்துள்ளனர். அவையாவும் சுவடி வடிவிலேயே பிறந்தன.

பழைய சுவடிகளின் பெருக்கம் - இறையுணர்வு நூல்கள் : தமிழ் மன்னர்கள் ஆலயங்களில் தேவாரம், திருவாசகம் முதலான நூல்களை நாள் தோறும் ஓதுமாறு செய்து அதற்காக மானியமும் அளித்தனர்.

63. என் சரித்திரம், பக்-361.64.சீவகசிந்தாமணி, பதிப்புரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/40&oldid=1571111" இலிருந்து மீள்விக்கப்பட்டது