உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவடி இயல்

25

உடையார்

ஸ்ரீராஜராஜீஸ்வரம்

உடையார்க்குத் திருப்பதியம் விண்ணப்பஞ்செய்ய உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் குடுத்த பிடாரர்கள் நாற்பத்தெண்மரும்...... என்னும் கல்வெட்டுச் செய்தி இராசராசன் தேவராம் ஓதுதற்கு நிவந்தம் கொடுத்ததைக் கூறுகிறது. இச்செயலால் சுவடிகள் பல பெருகலாயின என்பதற்கு மேலும் ஒரு கூற்றினைச் சான்று

காட்டலாம்.

அருட்பாசுரங்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். பல்லாயிரம் தமிழ் மக்கள் தலங்கள் தோறும் அடங்கன் முறைகளையும் திருவாசகத்தையும் ஓதி வந்தார்கள்...

இவர்கள் சில சமயம் திருமுறைகளைப் பூசையில் வைத்து மலர்களால் அருச்சித்து வழிபட முற்பட்டபோது, ஆதியில் கிடைத்த திருமுறைகளின் ஏட்டுப் பிரதிகள் பல மடங்கு பெருகலாயின. இவை இரண்டு விதத்தில் பெருகின. மூலப் பிரதியைப் பார்த்துப் பெயர்த்து எழுதிக் கொண்டே போனபோது பலப்பல புதுப்பிரதிகள் உண்டாயின; இவை ஒருவகை. மற்றொன்று, திருவாசகம் முழுமையும் மனப்பாடம் செய்து வைத்திருந்தவர்கள் தங்கள் ஞாபகத்திலிருந்து எழுதி வைத்ததனால் உண்டானபிரதிகள்.

ஏட்டில்

க்கூற்று மனப்பாடத்திலிருந்து சுவடிகள் உருவான முறையையும், சுவடிகள் பலவாகப் பெருகின செயலையும் உறுதிப்படுத்துகிறது.

இறையுணர்வின் மிகுதியால் பிறவாகிய தோத்திரப் பாடல் களும் மாலை நூல்களும் பலவாகத் தோன்றி, மக்களிடையே பரவி, அவர்கள் இல்லங்களில் சுவடி வடிவில் நிலைபெற்றன.

சிற்றிலக்கியங்களின் பெருக்கம் : குறுநில மன்னர்கள், வள்ளல்கள், பிறதலைவர்கள் ஆகியவர்களைப் புகழ்ந்து பாடிய சிற்றிலக்கியச் சுவடிகளும் இவ்வாறே மக்களிடையே பரவிப் பெருகின.

இதிகாசக் கதைகள் : இராமாமணம், பாரதம் போன்ற இதிகாசக்கதைகள் இசையோடு கூடிய கதைகளாக ஆங்காங்கே சொல்லப்பட்டு மக்களைக் கவர்ந்தன. அதனால் அவரவர்

>

65. தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி!!-, பகுதி-111, GT G007-65.

66. திருவாசகக் குறிப்புக்கள், பக்.164-165.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/41&oldid=1571112" இலிருந்து மீள்விக்கப்பட்டது