உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

சுவடி இயல்

விரும்பியவாறு அந்நூல்கள் முழுமையாசவும். ஒவ்வொரு நிகழ்ச்சிப் பகுதிகளாகவும் பல இல்லங்களில் குடி கொண்டன.

அல்லியரசாணி

படியெடுக்கப்பட்டுப்

மாலை, கிருட்டினன் தூது, சுபத்திரைக் கலியாணம், சூதாட்டப் போர், துரோபதை மாலையீடு, விதுரன் விருந்து, வீர அபிமன்யு மு தலான சிறுசிறு நூல்கள் பாரதக் கதை யின் பகுதிகளாக வடிவெடுத்தவையாகும். இவை நாடக வடிவிலும் வில்லுப்பாட்டு, அம்மானை வடிவங்களிலும் பெருகின.

மருத்துவச் சுவடிகள்: குழந்தைகள் முதல் முதியோர் வரை இருபாலாருக்கும் தேவைப்பட்ட தமிழ் மருத்துவம் சித்தர்களாலும் முனிவர்களாலும் தோற்றுவிக்கப்பட்டது. பயன்பாட்டு முறையில் கையாண்ட மருத்துவர்களாலும், பயன்படுத்திப் பலன் அடைந்த பொதுமக்களாலும் ஒவ்வொரு வகை மருத்துவமும் ஏடுகளில் பொறிக்கப் பெற்றுப் பெரும்பாலான இல்லங்களில் இடம்பெற்றன.

பிறசுவடிகள் : இவ்வாறே சோதிடம், கணிதம், இசை, நாடகம், பிற சாத்திர வகைகள் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றோர் தோற்றுவிக்க,ஆர்வமுடையோர் தோற்றுவிக்க, ஆர்வமுடையோர் படுயெடுத்துப் பயன்படுத்தினர்.

நூலாசிரியர் தாம் இயற்றிய நூலைச் சுவடியில் எழுதினர். மாணாக்கர் தாம் மனப்பாடம் செய்த நூலைச் சுவடியில் எழுதி வைத்தனர். மேலும் பல நூல்களைக் கற்க விரும்பியவர்கள்,தாம் கற்க விரும்பிய நூலைப் பிறரிடமிருந்து பெற்றுப் படியெடுத்து கொண்டனர். இவ்வாறு பல வகையில் சுவடிகள் உருவாக்கப் பெற்றன. செல்வந்தர், மன்னர் ஆகியோர் அளித்த ஊக்கத்தால் பல சுவடிகள் பெருகின. உரையாசிரியர் பலரின் ஆய்வினால் உரையோடு கூடிய சுவடிகளாகப் பெருகின. மக்களின் இறை யுணர்வால் பெருகிய சுவடிகள் மிகப்பல. மக்களின் தேவைக் காகவும் பல சுவடிகள் படியெடுக்கப் பெற்று வளர்ச்சியுற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/42&oldid=1571113" இலிருந்து மீள்விக்கப்பட்டது