முன்னுரை
2. அமைப்பும் வகையும்
சுவடிகளை உருவாக்குவதற்கு எழுதப்படுபொருள், எழுது பொருள், எழுதுகருவி என்ற மூன்றும் தேவைப்படுகின்றன. உலகத்தின் பல பகுதிகளிலும் பபைரஸ், தோல் முதலான எழுதப் படுபொருள்கள் பயன்பட்டன. நம்நாட்டில் பெரும்பாலும் ஓலைச் சுவடிகளிலேயே பல நூல்கள் உருவாக்கப் பெற்றுள்ளன. அச்சுவடிகள் புறஅமைப்பாலும் அக அமைப்பாலும் பல திறப் பட்டுக் காணப் பெறுகின்றன; பொருளாலும் தன்மையாலும் நடையாலும் பலதிறப்படுகின்றன. சுவடிகளின் அமைப்பையும் வகையையும் இவ்வியல் ஆராய்கிறது.
அ. பொருள்கள் - எழுதப்படுபொருள்
இத்தகு
பபைரஸ் : பபைரஸ் என்னும் கோரைப்புல்லைப் பல நாடு களிலும் எழுதப் பயன்படுத்தினர். கி.மு. இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே எகிப்தியர் நைல் ஆற்றங்கரையில் விளையும்
இப்புல்லில் நாணல் குச்சிகளால்
இலைச்சாறு, மிருகங்களின்
இரத்தம் ஆகியவற்றைக் கொண்டு எழுதியுள்ளனர். எகிப்தின் அண்டை நாட்டினரான கிரேக்கர் (யவனர்), பினீஷியர், உரோமர், எபிரேயர், அர்மீனியர் ஆகிய பலரும் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை பபைரஸ் என்னும் புல்லையே எழுதப்படு பொருளாகப் பயன் படுத்தினர்.1
"ஒரு மரணத்தைக் குறித்து கி.மு.1500 இல் எழுதிப கையறு நிலைப் பாடலின் பேபிரஸ் பிரதியொன்று பிரிட்டிஷ் கண்காட்சிச் சாலையில் உள்ளது.’
292
.
1. Encyclopaedia Britannica, Vol, XVill. pp. 618-619. 2. இலக்கிய உதயம்,எஸ். வையாபுரிப்பிள்ளை. பக்-25,