28
சுவடி இயல்
மேற்
'உலகத்திலுள்ள நூல்களுள் மிகமிகப் பழமையானது கூறியபடி எகிப்தில் நீலநதிக் கரையிலே தோன்றியதுதான். இந்நூலின் பிரதியைத் தீப்ஸ் நகரத்தில் ப்ரீஸ்ஸி என்பவர் கண்டு பிடித்தனர். இதனைப் ப்ரீஸ்ஸி சுவடி என்று வழங்குகிறார்கள். பாரீஸ் நகரத்தில், தேசிய நூல் நிலையத்தில் இந்நூலின் பிரதி இப்பொழுது வைக்கப்பட்டுள்ளது. இப்பிரதி கி. மு. 2500-ல் எழுதப் பெற்றது. இந்நூலின் பெயர் ப்டாஹ்-ஹோட்டெப் உபதேசங்கள்.' ப்டாஹ்-ஹோட்டெப் என்பவர் கி. மு. 3850-ல் எகிப்து அரசனாக முடி சூடியவர். ஆகவே இந்நூல் தற்காலத்தி லிருந்து 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.” என்னும் இக்குறிப்பு களால் தொன்மைக் காலத்தில் பயன்படுத்திய எழுதப்படு பொருள்கள் பற்றிய செய்திகள் புலனாகும்.
∞.
பலபரஸ் என்ற சொல்லின் வளர்ச்சி : சுவடி அல்லது புத்தகம் என்ற பொருளில் பபைரஸ் சுருளைக் கிரேக்கர் பிப்லியன் என்று வழங்கினர். உரோமர் பிப்னி என்று வழங்கினர். இதுவே கிறித்துவ வேதநூலாகிய விலிய நூலுக்கும் (பைபிள்) பெயராயிற்று. பேப்பர் என்ற சொல்லும் பபைரஸ் என்பதிலிருந்து உருவானதேயாகும்.
1
பிறபொருள்கள்: பபைரஸ் விரைவில் அழிந்துபடுவதால் பல நாடுகளில் தோலைப் பயன்படுத்தினர். பிற நாடுகளில் தோலும் பபைரஸ் கோரையும் பயன்படுத்தப் பெற்ற போது நம் நாட்டில் பெரும்பான்மையாக ஓலையே எழுதப்படு பொருளாகப் பயன் படுத்தப் பெற்று வந்தது. களிமண் பலகை, கல், தோல், உலோகத் தகடு, இலை, மரப்பலகை, பூர்ஜப்பட்டை, துணி, மூங்கில் பத்தை முதலான பொருள்களும் எழுதப்படு பொருள்களாகப் படுத்தப் பெற்றன என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன.
பொன் தகடு
......பைம்பொன்செய் தவிசின் உச்சி
இருந்துபொன் ஓலைசெம்பொன் ஊசியால் எழுதி 'பைம்பொனின் ஓலை மீது பண்புற வெழுதி யின்னே எம்பியும் ஏகு கென்றான்
பயன்
3. இலக்கிய உதயம் பக். 18-19 .4. சீவகசிந்தாமணி, 369. 5. வில்லிபாரதம் சூதுபோர், 51,