உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

சுவடி இயல்

அரசு செய்திகளைப் பொறிக்கக் கற்களைப் பயன்படுத்திய தனால் அச்செய்திகள், சித்தன்னவாசல் கல்வெட்டு, மீனாட்சிபுரம் கல்வெட்டு எனக் கல்வெட்டு என்ற பெயராலேயே கூறப்பெறு கின்றன.

ஓலை : :

நம் நாட்டில் பயன்படுத்திய எழுதப்படு பொருள் களுள் ஓலையே மிகுதியானதும் முதன்மையானதும் ஆக விளங்கு கிறது.

66

நாம் சொல்ல நம் ஓலையெழுதும்... முதன்

தீர்த்தகரன் எழுத்தினாலும் ”12 ஒப்பமாய் உரைக்க வல்லான் ஒருவனோர் ஓலை கொண்டு

"மட்டோலைப்

18

பூவனையார் வார்ந்தோலை சேர்த்தெழுதிப்

பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும்16

செய்திகள் எழுதவும், தூதுவரின் செய்திகள் அனுப்பவும், இலக்கி யங்களை எழுதி வைக்கவும் ஓலையைப் பயன்படுத்தினர் என்பதை யும், அரசரிடம் 'ஓலையெழுதுவோர்' என்னும் பணியாளர் இருந்தனர் என்பதையும் இவ்வடிகள் உணர்த்துகின்றன.

இலை, துணி

“கையிற் புனையும் கழிநுண் ணாளர்

ஏட்டிலும் கிடையினும் மூட்டமை கிழியினும்”1

என்னும் இவ்வடிகள் இலையுந் துணியும் எழுதப்படு பொருள் களாகப் பயன்படுத்தப் பெற்றன என்பதை உணர்த்துகின்றன.

தாழைமடல்

66

‘முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு விரைமலர் வாளியின்

திருமுகம் போக்கும் செவ்விய ளாகி'

என்னும் சிலப்பதிகாரக் கூற்று தாழைமடல் பொருளாகப் பயன்பட்டதைச் சுட்டுகிறது.

எழுதப்படு

இலையும் பட்டையும் : "பதப்படுத்திய வாழை இலை பயன் படுத்தப் பெற்றுள்ளது. இன்றும் கூட வங்கத்தின் கிராமப்பகுதிப்

12. கல்வெட்டு ஓர் அறிமுகம், பெரிய லெய்டன் செப்பேடு, பத்தி 2. 13. சூளாமணி, 108.

15. பெருங்கதை (பக். 324): 140. 16. சிலப்பதிகாரம், 8;47-49.

14. தமிழ்விடுதூது, 8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/46&oldid=1571117" இலிருந்து மீள்விக்கப்பட்டது