உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பும் வகையும்

31

பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள்... ஆல், எருக்கு முதலியவைகளில் எழுதியதாக யோகினி தந்திரம் கூறுகிறது. இமயமலைச் சாரலிலே பூர்ஜ மரங்கள் அதிகம் உள்ளன. இம் மரத்தின் பட்டை ஆதிநாள் இருந்து மொகலாயர் காலம்வரை பயன்பட்டதாக அல்பரூனி குறிப்பிடுகிறார். அசாம், வங்கப் பகுதி களில் சசி அல்லது அகர் மரவகைப் பட்டைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவைகளைத் தவிர நுணா, வேம்பு முதலியவை களின் பட்டைகள் மந்திர தந்திரங்கள் எழுதப் பயன்படுத்தப் பட்டுள்ளன” 17

இவற்றுள் ஓலையே பெரும் பான்மையாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளது என்பது இன்று நம்மிடையே கிடைக்கும் சுவடிகளால் அறியமுடிகிறது.

மிகுதியாக ஓலையைப் பயன்படுத்திய காரணம் : இலை, மரப் பட்டை, களிமண்பலகை போல்வன விரைவில் அழியக் கூடியவை. மரப்பலகை, மூங்கில் பத்தை போன்றவற்றில் பெரிய நூல்களை எழுதிக் கையாளுவது கடினம். கடினம். தோல், துணி, உலோகத் தகடு போல்வன மிகுந்த பொருட் செலவினை உண்டாக்கும். பிற உயிர்களைக் கொன்று அவற்றின் தோலில் நல்ல கருத்துடைய நூல்களை எழுதுவது மனிதத்தன்மைக்கு முரண்பட்டதாகவும், அருவருக்கத் தக்கதாகவும் அமைகிறது. அவற்றில் விரைவாக எழுதவும் முடியாது. கருங்கல் போன்ற பிறபொருள்கள் பிற இடங் களுக்கு எடுத்துச்செல்ல இயலாதவை. ஆனால் ஓலையோ ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் வரை அழியாத்தன்மை வாய்ந்தது; மிகுந்த செலவு இல்லாதது; தமிழகத்தில் கிராமப்புறங்கள்முதல் எல்லா இடங்களிலும் மிகுதியாகவும் எளிமையாகவும் கிடைக்கக் கூடியது; மிகப் பெரிய அளவுடைய நூல்களையும் ஒருகட்டில் அடக்கக்கூடிய தன்மை வாய்ந்தது; பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லும் அளவு உடையது; பாதுகாக்க ஏற்றது. இக்காரணங் களால் ஓலைகளையே தமிழர் தேர்ந்தெடுத்து மிகுதியாகப் பயன் படுத்தினர்.

எழுது கருவிகள் : ஆணி, கூரியகல், தண்டு, நாணல், பறவை இறகு, பன்றிமுள், பன்றிமுள், விலங்குகளின் விலங்குகளின் எலும்பு, மெல்லிய தூரிகை போன்ற பல பொருள்களை மக்கள் எழுது கருவிகளாகப் பயன் படுத்தியுள்ளனர். ஏறாலும் ஓலைகளில் எழுதும் எழுத்தாணி

17. இந்திய நூலக இயக்கம், பக். 79-80.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/47&oldid=1571118" இலிருந்து மீள்விக்கப்பட்டது