32
சுவடி இயல் யையே மிகுதியாகப் பயன்படுத்தினர் என்பது தெளிவு. எழுத் தாணியை ‘எழுத்து ஊசி' எனவும் வழங்கியுள்ளனர். இவற்றுள் சிலவற்றிற்கு இலக்கியச் சான்றுகள் :
தந்தம்: இலக்கியத்தை முனிவர் கூற இறைவன் எழுதினான் என்னும் மரபில் தந்தம் எழுது கருவியாகிறது.
முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக வடமேரு வெற்பாக அம்கூ ரெழுத்தாணிதன் கோடாக எழுதும் பிரானை 18
"மருப்பூசி யாக மறங்கனல்வேன் மன்னர் உருத்தகு மார்போலை யாகத்-திருத்தக்க வையக மெல்லா மெமதென் றெழுதுமே "
91
இவை தந்தமே எழுத்தாணியாகவும், வடமேரு வெற்பும் மன்னர் தம் மார்புமே ஏடாகவும் கொண்டு எழுதப்பட்டதாகக் கூறும் இலக்கியக் கூற்றுகள் ஆகின்றன.
பித்திகை முகை, உகிர்
"திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி
அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது பித்திகைக் கொழுமுகை ஆணிகைக் கொண்டு 26
"மலர்ந்த செந்தாழை மென்மடலின் மேற்றனக் கிலங்கிழை யுகிரினா லெழுது பாசுரம்”21
என்னும் அடிகள் பித்திகை முகையினையும், உகிரினையும் எழுதும் ஆணியாகக் கொண்ட செயல்களுக்குச் சான்றாகின்றன.
பொன் ஊசியும் எழுத்தாணியும் : ஓலையில் எழுதப் பயன் பட்டது எழுத்தாணி என்பதைப் பல்லாற்றாலும் அறிய முடிகிறது. "...பைம்பொன்செய் தவிசின் உச்சி
இருந்துபொன் ஓலை செம்பொன் ஊசியால் எழுதிக எழுத்தாணியால் எழுதப்பட்டது ஏடு'
18. வில்லிபாரதம், துதிப்பாடல். 19. பெருந்தொகை, 518. 20. சிலப்பதிகாரம், 8:49-51. 21. நைடதம், நளன்தூது, 40. 22. சீவகசிந்தாமணி, 369.23. வீரசோழியம், வேற்றுமை,7.