உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பும் வகையும்

    • 24

"ஓலை தேடி எழுத்தாணி தேடி ’2*

33

இவை ஓலையில் எழுத எழுத்தாணியே பயன்பட்டது என்பதை உணர்த்துகின்றன எழுத்தாணி இரும்பினால் ஆக்கப் படுவது. மன்னரின் குழந்தைகள் பொன்னாலான எழுத்தாணியைப் பயன் படுத்தினர் என்பதும் விளங்குகிறது. இக்கருவிகள் எழுதுகோல் எனவும் வழங்கப்பட்டன.

"எழுதுங்கால் கோல்காணாக் கண்ணே போல்’2 5 என்பது இதனைத் தெளிவுபடுத்தும்.

எழுத்தாணி வகை :

எழுத்தாணியானது பயன்பாட்டு அடிப் உடையதாக அமைகிறது;

படையில் மூன்று அமைப்பினை

குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி என்ற பெயர்களையும் பெறுகிறது. அவற்றுள்,

குண்டெழுத்தாணி : இது அதிக நீளம் இல்லாதது; கொண்டை (மேற்புறம் கனமாகவும் குண்டாகவும் அமைந்தது; ஓலையில் எழுதத் தொடங்குவோர் பயன்படுத்துவது; இதன் கூர்மையும் குறைவாகவே இருக்கும். இதனால் பெரிய எழுத்துக் களாகவே எழுத முடியும்.

வாரெழுத்தாணி: இது குண்டெழுத்தாணியைவிட நீள மானது; மேற்புறத்தில் கொண்டைக்குப் பதிலாகச் சிறிய கத்தி அமைந்திருக்கும். இக்கத்தி தனியாக இணைக்கப் படாமல் ஒரே இரும்பில் நுனிப்பக்கம் கூர்மையாகவும் மேலே செல்லச்செல்லக் கனத்தும் அமைந்து மேற்புறத்தில் கனத்த இரும்பானது தட்டை யாகக் கத்தி வடிவில் அமைந்து இருக்கும். இக் கத்தியினை ஓலை வாருவதற்குப் பயன்படுத்துவர். நுனிப்பக்கம் எழுதவும் மேற் பக்கம் ஓலை வாரவும் பயன்படுவதால் இது வாரெழுத்தாணி என்ற காரணப் பெயரினைப் பெறுகிறது. நன்றாக ஓலையில் எழுதும்

பழக்கமுடையவர்கள்,

தாங்களே அவ்வப்போது ஓலையினை

நறுக்கி, வாரி ஒழுங்குபடுத்தி ஏடுகளாக அமைத்துக் கொள்ளும் நிலையில் இவ்வாரெழுத்தாணியினைப் பயன்படுத்துவர். இதுவே பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்ட எழுத்தாணியாகும். இவ் வெழுத்தாணியினைப் பனை ஓலையால் உறை செய்து அதில் செருகி வைப்பதும் உண்டு. வாரெழுத்தாணியே மிகுதியாகப் பயன்பட்டது என்பதை,

24. தனிப்பாடல், தொகுதி, 4-717. 25. குறள், 1285. சுவ 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/49&oldid=1571120" இலிருந்து மீள்விக்கப்பட்டது