உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பும் வகையும்

35

குகைக் கோயில்கள் போன்றவற்றில் காணும் வண்ண ஓவியங்கள் புலப்படுத்துகின்றன. சுவடிக் கட்டுகளின் புறத்தே அமைக்கப் படும் கட்டைகளிலும் அவ்வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. இதுபோலவே விளக்கின்மை, இலைச்சாறு, பூச்சாறு, மிருகங்களின் குருதி ஆகிய பொருள்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. களில் எழுத்தாணி கொண்டு எழுதிய எழுத்துகள் ஓலை நிறத்தி லேயே இருக்குமாதலின் அவற்றின் மீது விளக்கின்மை, இலைச் சாறு, மஞ்சள் போன்றவற்றைப் பூசி எழுத்துகள் தெளிவாகத்

தெரியுமாறு செய்துள்ளனர்.

இதனை,

மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்

மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்” 2 °

மனம்தளை பரியநின்ற மதலைமை யாடுகென்றே"

என்னும் அடிகள் புலப்படுத்துகின்றன.

ஆ.

ஏடு தயாரித்தல் - பதப்படுத்துதல்

பனை

ஓலை

ஓலையைப் பதப்படுத்தி ஓழுங்குபட நறுக்கிச் சுவடி வடிவில் அமைத்து எழுதப் பயன்படுத்துவர்.பதப்படுத்துவது என்பது பெரும்பாலும் ஓலைகளை நிழலில் உலர்த்தி எடுப்பதே ஆகும். முற்றிய ஓலைகளாயின் உலர்ந்தபின் ஒன்றிரண்டு நாட்கள் சேற்றில் புதைத்து வைத்துப் பின்பு எடுத்து நிழலில் உலர்த்திப் பதப்படுத்துவதும் உண்டு.

"பனை ஓலைகளை ஒரே அளவாக நறுக்கி, வேகவைத்து உலர்த்தி ஒன்றாகச் சேர்த்து...கட்டிய சுவடிகளே ஓலைச் சுவடிகளாகும்”81

என்னும் கூற்றில் உள்ள வேகவைத்துப் பதப்படுத்தும் முறை நடைமுறையில் இருந்ததாகத் தெரியவில்லை. இதனைச் சொல் விளங்கும் பெருமாள் அவர்களும் தம் ஆய்வேட்டில் எடுத்தாளு கிறார்கள்.

'எழுத்தாணிக்குப் பதமான பனை ஓலைகளை ஒரே அளவாக நறுக்கி வேகவைத்து உலர்த்தி ஒன்றாகச் சேர்த்து...கட்டிய சுவடிகளே ஓலைச்சுவடிகளாம்”81(அ)

29. தமிழ்விடுதூது, 25.

31. அச்சுக்கலை, பக். 11-12. 31(அ).

30. சீவக சிந்தாமணி, 367.

டாக்டர் உ.வே.சாமிநாதையரின் பணி ஓர் ஆய்வு.

பக். 49.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/51&oldid=1571122" இலிருந்து மீள்விக்கப்பட்டது