உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

சுவடி இயல் என்பது அவர்காட்டும் தொடர். இதிலும் எழுத்தாணிக்குப் பதமான ஓலைகளை எடுத்து நறுக்குவது என்பதும் பொருத்த முடையதாகத் தெரியவில்லை.

சட்டம் : ஒழுங்காக நறுக்கப்பட்ட அவ் ஓலைகள் இடையே முதுகு நரம்புடன் கூடியதாய் இரண்டு இரண்டு ஏடுகளாக ணைந்தே காணப்படும். இவ்வாறு நறுக்கப்பட்டவை 'சட்டம்' என்று கூறப் படும். ஓலையில் எழுதத் தொடங்கும் ஆரம்ப நிலையில் இச் ச் சட்டங்களையே பயன்படுத்தியுள்ளனர் என்பது தமிழ் எழுத்து களும் எண்களும் மட்டுமே எழுதப்பட்டுள்ள அரிச்சுவடி, எண்சுவடி போன்ற சுவடிகளைக் காணப் புலனாகும். இச்சட்டங்களைச் சுவடிகளின் இரு புறத்தும் வைத்துக் கட்டவும் பயன்படுத்துவர்.

.

ஏடு : இச்சட்டங்களுக்கு இடையேயுள்ள நரம்புகளை ஒழுங்காக நீக்கினால் ஒவ்வொரு சட்டமும் இரண்டிரண்டு தனிப் பகுதிகளாகப் பிரியும். அவை ஒவ்வொன்றையும் ஏடு என்று வழங்குவர். வாழை இலையின் இடைத்தண்டு நீக்கப்பட்டுக் கிழிக்கப் பட்ட இலையினை ஏடு என்று கூறும் வழக்கு கூறும் வழக்கு இக்காலத்திலும் ருக்கிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஏடுகள் 'வெள்ளோலை' என்றும் வழங்கப்பெற்றன. வெள்ளோலை என்பதற்கு எழுதா ஓலை என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. சிறந்த கருத்து களை ஓலையில் பொறித்து வைக்கும் செயலையும் ஏட்டில் எழுதுதல் என்று வழங்கி வந்துள்ளனர்.

வெள்ளேட் டங்ஙன் வித்தக மெழுதிய '

8 2

"தூதொய் பார்ப்பான் மடிவெள் ளோலை"8

வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை கண்பார்க்கக் கையால் எழுதானை

88

என்னும் பாடலடிகள் எதுவும் எழுதா ஓலையை என்று சுட்டுகின்றன.

வெள்ளோலை

ஏட்டில் எழுதுதல்

"நீடுமெய்ப் பொருளில் உண்மை நிலைபெறுந் தன்மை ஏடுற எழுதி.84

32. பெருங்கதை, 1:32:69.33. அகநானூறு, 337. 33(அ) தனிப்பாடல், 49.

34. திருஞான சம்பந்தர் புராணம், 796.

[யெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/52&oldid=1571123" இலிருந்து மீள்விக்கப்பட்டது