உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பும் வகையும்

37

"கற்றமந் திரங்க ளெல்லாம் தனித்தனி கனத்த வேட்டில் ஒற்றருந் தலைவ ரெண்ணா யிரவரு மெழுதி யிட்டார் என்னும் அடிகள் கருத்துகளை ஓலையில் பொறித்து வைக்கும் செயலை ஏட்டில் எழுதுதல் என்று கூறும் வழக்காற்றை உணர்த்து கின்றன.

ஓலைவாருதல்: ஏடுகளைத் தயாரிக்கும் செயல் ‘ஓலை வாருதல்' எனப்படும். ஏடுவாருதல் என்னும் வழக்காறும் இருந் துள்ளது.

“படிக்கும் நூல்களை ஏட்டிலேயே எழுதிப் படித்து வந்தோம். அப்படி எழுதுவதற்கு முன்பு பனையோலை களை வருவித்து வாரித் துளையிட்டுச் சேர்த்துப் புத்தக மாக்கி எங்களிடம் கொடுத்து எழுதச் செய்வார்”86 "நான் பாடம் கேட்டு எழுதி முடித்தேன். அப்போது என் ஆசிரியர் ஏடுவாரிச் சுவடி சேர்த்துக் கொடுத்தார்...அந் நூலைப் பிரதி செய்து கொள்ளும்படி சொன்னார்

என்னும் அனுபவக் கூற்றுகள் ஒலைவாருதல் என்னும் செயலை விளக்குகின்றன.

துளையிடுதல் : வாரி வாரி எடுக்கப்பெற்ற ஏடுகளை ஒழுங்காக அடுக்கி, நீள அளவினை நான்கு பாகமாக்கி அவற்றுள் முதல்பாக முடிவிலும் மூன்றாம்பாகத் தொடக்கத்திலுமாக இரண்டு துளை யிடுவது வழக்கம். அவையே ஏடுகளைத் தொகுத்துச் சுவடியாக்கப் பயன்படும். நீளம் குறைவான நீளம் குறைவான ஏடுகளாயின் ஒரே துளையிட்டுக் கட்டுவதும் உண்டு.

ஓலை பதம்பார்த்தல் : ஏடுகள் எழுதப் பதமாக இருக் கின்றனவா என்று அறிய எழுத்தாணியால் சுழித்துப் பார்ப்பர். சுழிக்க எளிமையாக இருந்தால் எழுதத் தொடங்குவர். எழுத் தாணி சிக்கினால் ஏடு ஈரமாக உள்ளது என்றும், எழுதும்போது கொர கொர வென்று சத்தம் ஏற்பட்டு, ஓலையில் துளைவிழுதல், ஓலை முறிதல் முதலியன ஏற்பட்டால் மிகுதியாக உலர்ந்துவிட்டது என்றும் அறிந்து சிறிது உலர விடுவதோ, ஈரமாக்குவதோ செய்து, பதமாக்குவர். இவ்வாறு சுழித்து அறியும் முறையே பிற்காலத்துப் 'பிள்ளையார் சுழி' இடும் வழக்கமாயிற்று போலும்.

35. திருவிளையாடல், கழுவேற்றின படலம், 18. 36. [மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம், பக். 16, 37. ஷை பக். 259.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/53&oldid=1571125" இலிருந்து மீள்விக்கப்பட்டது