உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

சுவடி இயல்

பனைவகை : கூந்தற்பனை எனப்படும் தாளிப்பனை (ஸ்ரீதாளம்), நுங்குப்பனை ஆகிய பனை மரங்களின் ஓலைகளே சுவடிகளுக்குப் பயன்படுத்தப் பெற்றன.

“நீலக் காழ்மிசை நெற்றி மூழ்கி உள்நுகுப்பு ஓலையும்'’88

"வெண்மணல் பொதுளிய பைங்கால் கருக்கின்

39

கொம்பைப் போந்தைக் குடுமிவெண் தோட்டு என்பன பொதுவாகப் பனை மரங்களைச் சுட்டும் இலக்கியத் தொடர்கள்.

சுவடியை உருவாக்குதல் : ருவாக்குதல் : உரோமர் பலகைத் துண்டுகளின் மேல் ஆணியால் எழுதி வைத்தனர். அப்பலகைத் துண்டுகளின் அடுக்கைக் கோடக்ஸ் (Codex) என்றனர். அதன் வழியே ஏடு களின் தொகுப்பாகிய கட்டையும் கோடக்ஸ் என்றே வழங்கினர். அதுவே வேற்று மொழித் தாக்கத்தால் பண்டில் (Bundle) எனப் பட்டது. ஆனால் தமிழரோ எழுதப்படாத ஏடுகளின் தொகுப்பையும் சுவடி என்றே வழங்கினர். எழுதப்படாத தனி ஏடுகள் மட்டும் வெள்ளோலை, வெள்ளேடு எனப்பட்டன.

இ.

40

சுவடிகளின் அமைப்பு

புற அமைப்பு-நீள அகலம் : ஓலைகளின் அளவிற்கு ஏற்பச் சுவடிகளின் நீள, அகலங்கள் அமையும். சுவடி தயாரிப்போரின் திறமைக்கும் அழகுணர்ச்சிக்கும் ஏற்ப அவற்றின் வடிவம் அமைவ துண்டு. தேவைக்கும் நூலின் அளவிற்கும் ஏற்றவாறு சுவடியின் கன அளவு உருவாகும்.

'பல தமிழ் நூல்களை, ஒவ்வொன்றையும் ஒரே அளவுள்ள எழுதி வைத்துக் கொள்வதில் பிள்ளைக்குப் பெருவிருப்பம்

தாகச் சுவடிகளில்

மீனாட்சிசுந்தரம்

இருந்தது’’41

சுவடிகளைத் திரட்டி வைப்போரின் அழகுணர்ச்சி இக்கூற்றால் புலப்படுகிறது.

சிறிய, பெரிய சுவடிகளின் அமைப்பு : சென்னை, அரசினர் சுவடி நூலகத்திலுள்ள கரிநாள் விளக்கம் (டி. 1998) என்னும் சுவடி

39.

38. பெருங்கதை, (பக். 323)--129. 40. Encyclopaedia Britannica, p.620. 41. அச்சும் பதிப்பும், பக். 218.

குறுந்தொகை, 281.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/54&oldid=1571126" இலிருந்து மீள்விக்கப்பட்டது