உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பும் வகையும்

39

சுமார் எட்டு செ.மீ. நீளமும், முக்கால் செ. மீ. அகலமும் உடையது. பதினாறு ஏடுகளை உடைய அச்சுவடியில் பக்கத்திற்கு இரண்டு வரிகளே எழுதப்பட்டுள்ளன. ஆனால் அதே நூலகத்தில் உள்ள கந்தபுராணச் சுவடியோ (டி.542) ஐம்பது செ.மீ. நீளமும் நான்கு செ.மீ. அகலமும் உடையது. ஆயிரத்து நூற்று எண்பத்திரண்டு பக்கங்கங்களையுடையது. ஒரு பக்கத்திற்குப்

பத்து வரிகள் எழுதப்பட்டுள்ளன. இச் சுவடியைக் காட்டிலும் நீள அகலங்களில் சிறிது குறைந்துள்ள கம்பராமாயணச் சுவடி (டி.514), ஆயிரத்து நானூற்றுத் தொண்ணூற்றிரண்டு பக்கங்களை யுடைய மிகப் பெரிய சுவடியாகும். பெரியபுராணச் சுவடி (டி.619), அப்பர் தேவாரம் (டி. 1131) ஆகிய சுவடிகளும் ஆயிரம் பக்கங் களுக்கு மேலானவை.

செ.மீ.

பம்பர வடிவச் சுவடி : சுமார் நான்கு செ. மீ. விட்டத்தில் வட்ட வடிவமாக நறுக்கி இடையே துளையிட்டுக் கோக்கப் பெற்ற ஒரு சுவடியில் திருமுருகாற்றுப்படை எழுதப் பெற்றுள்ளது. அவ்வட்ட வடிவமான ஏடுகள் குறுக்களவில் (விட்டம்) ஒன்றற் கொன்று ஒரு ஓலையின் கன அளவு குறைவாக வெட்டப்பட்டுக் கோக்கப்பட்டுள்ளதால் அதன் முழு வடிவம் ஒரு பம்பரம் போலக் காட்சியளிக்கிறது.

சிவலிங்க வடிவச் சுவடி : ஒரே அளவுடைய வட்டங்களை நறுக்கி இணைக்கப்பட்ட சிவலிங்க வடிவமானது, நீண்ட சதுரத் தில் பல ஏடுகளால் ஆன பீடத்தின் மேல் பொருந்துமாறு துளை யிட்டுக் கோக்கப்பட்ட சுவடியும் உண்டு. பீடமாக அமைந்த ஏடு களிலும், சிவலிங்க வடிவில் ஆன ஏடுகளிலும் திருவாசகம் எழுதி வைப்பதுண்டு. திருமுருகாற்றுப்படை, திருவாசகம் ஆகிய பாடல்கள் எழுதப்பட்ட இச்சுவடிகளைப் பூசையில் வைத்து வழிபடுவர்.

சட்டங்களின் அமைப்பு : மருத்துவச் சுவடிகள் பலவற்றின் சட்டங்களில் இலைச்சாறு, மஞ்சள், சுண்ணாம்பு, போன்ற பொருள்களால் ஆக்கப்பட்ட பலவகை வண்ணங்களால் மூலிகை களின் படங்கள் வரையப் பெற்றுள்ளன. இராமாயணம் எழுதப் பட்ட சுவடியின் சட்டத்தில் நாமம், சங்கு, சக்கரம் ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இவற்றால் தேவைக்கும் நூலின் அளவிற்கும் ஏற்றவாறு சுவடிகள் உருவாக்கப் பெறுகின்றன என்பதோடு, சுவடி தயாரிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/55&oldid=1571127" இலிருந்து மீள்விக்கப்பட்டது