உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

சுவடி இயல் போரின் திறமைக்கும் அழகுணர்ச்சிக்கும் ஏற்பவும் சுவடிகளின் புற வடிவங்கள் உருவாகின்றன என்பதும் தெளிவாகின்றது.

சுவடிக்கட்டின் அமைப்பு : சுவடியின் முன்னும் பின்னும் முதுகு நரம்பு நீக்கப்படாத சட்டங்கள் சிலவற்றை அமைத்துச் சுவடிக் கட்டினை உருவாக்குவர். மரச்சட்டங்களை அமைப்பதும் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. ஓலைச்சட்டம், மரச்சட்டங் களிட்டுக் கட்டிய சுவடியினை அழகிய துணியில் சுற்றி வைக்கும் முறையும் இருந்துள்ளது. அழகான நூல்கயிறு அல்லது பட்டுக் கயிறு சுவடியின் ஏடுகளைச் சிதறாமல் பாதுகாத்து நிற்கும். ஒரு துளையில் இக்கயிறு நிற்பதுபோல் மற்றொரு துளையில் குச்சியோ ஆணியோ நின்று மேலும் அக்காவலைப் பலப்படுத்தும். இரு முக்கோணங்கள் இணைந்தாற்போல வெட்டப்பட்ட, நரம்போடு கூடிய, கிளி மூக்கு என்னும் ஓலைத் துண்டு கயிற்றின் நுனியில் கட்டப்பெற்று கயிறு கழன்று வராதபடி பாதுகாக்கும். துளை யிடப் பெற்ற செப்புக்காசு, உலோகத்தகடு, சோழி ஆகியவை கிளிமூக்கிற்குப் பதிலாக அமைவதும் உண்டு.

கலப்பு ஏடுகளுடைய சுவடிகள் : ஒரே நூல் எழுதப்பட்டுள்ள சுவடியில் புதியனவும் பழையனவுமாகிய ஏடுகள் காணப்படுவதும் உண்டு. இவை ஒரே அளவுடையனவாகவோ பலவேறு அளவுடை யனவாகவோ இருக்கும். இவற்றை நோக்க ஒரு நூல் பல காலத் திலும் எழுதி உருவாக்கப் பெற்றுள்ளது என்பதும், தேவையான ஏடுகள் அவ்வப்போது தயாரித்துக் கொள்ளப் பெற்றன என்பதும் புலனாகும். மாறாக ஒரே அளவினதாக அமைந்த சுவடிகளே மிகுதி.

சுவடிகளின் அ அமைப்பு : அ காப்புப் பாடலுடன் தொடங்கு வதும், நூலின் பெயர் முதலியன சுட்டுவதும், உட்தலைப்புகள் அமைப்பதும், முடிவில் வரலாறு கூறுவதும், வாழ்த்துடன் முடிப்பது மாகிய முறைகள் சுவடிகளின் அகஅமைப்புகளாகின்றன.

சுவடிகளின் தொடக்க அமைப்பு : இறைவணக்கம் அல்லது காப்புப் பாடலுடன் தொடங்குவது அனைத்துச் சுவடிகளுக்கும் பொருந்துகிறது. உரைநடை (வசனநடை) நூலாயினும் றை வணக்கப் பாடல் அமைந்துள்ளது. இப்பாடல் பெரும்பான்மையும் நூலொடு தொடர்புடையதாகவும், நூலாசிரியரால் செய்யப் பெற்றதாகவும் இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளர் மீது பாடப் பெற்ற பாடல்களும் காணப்படுகின்றன. சில சுவடிகளில் நூலொடு தொடர்புடைய இக் காப்புப் பாடல்களுக்கு முன்பு, ஏடு எழுதுவோர் சில பாடல்களை எழுதி வைத்துள்ளனர். அவை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/56&oldid=1571128" இலிருந்து மீள்விக்கப்பட்டது