உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

சுவடி இயல்

"வருள்சிசு வாகடத்தை வகுக்கநான் உரையாய்ப் பாடித் தெருளென வாழி பாதம் சீர்பெறத் தொழுதேன் காப்பு”46 காப்புப் பாடல்களாகிய இவையும் நூலொடு தொடர்புடையவை; நூலாசிரியரால் இயற்றப் பெற்றவையாகும்.

உரைநடைச் சுவடிகளில் காப்புப் பாடல் : இராமாயண வசனம், பாகவதசாரம் ஆகிய உரைநடைச் சுவடிகளிலும் முதலில் இறைவணக்கப் பாடல்கள் தரப்பட்டுள்ளன. இராமாயண வசனம் என்னும் சுவடியில் (டி. 381)

அவற்றுள்

"நாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழு முண்டாம்" (கம்பரா. பா.12)

என்று தொடங்கும் கம்பராமாயணப் பாடலே முதலில் அமைந் துள்ளது.

"வேத வியாசர் விரித்துரைத்த பாகவத மோதிக் கருத்து ளுறுதிபெற்றுத்-தீதகற்றி

மோட்சமுட னைசுரிய முண்டாய் முகூர்த்தமெனுங் காட்சிபெற மும்மதத்தான் காப்பு”3

47

என்னும் பாடல் பாகவத சாரம் என்னும் உரைநடைச் சுவடியில் எழுதப் பட்டுள்ளது.

பல கடவுளர் வணக்கம்

< <

ஆதியாம் அகண்டபரி பூரணமாய் நின்ற

அகண்டபரா பரத்திருந்தஐங் கரனே காப்பு

சோதியாம் அறுமுகவன் பாதங் காப்பு

துரியவெளி தனில்நின்றசுந் தரியே காப்பு

வாதியா மென்குருவின் பாதங் காப்பு

மகத்தான பெரியோர்கள் சரணங் காப்பு

பேதியா வைத்தியந்தான் அறுநூ றாகப்

பேசுகிறேன் வாணிபதம் பேராங் காப்பே’”48

இப்பாடல் பல கடவுளர்மீது பாடப் பெற்றது. ஒரே பாடலில் பல கடவுளர்களைப் போற்றும் இம்முறை மருத்துவச் சுவடிகள், சோதிடச் சுவடிகள், பலவகைச் சிற்றிலக்கியச் சுவடிகள், தத்துவம், ஞானம் ஆகிய பொருளமைந்த சுவடிகள் ஆகிய பலவற்றிலும் காணப்படுகிறது.

46.

தன்வந்திரி குழந்தை வாகடம் -202.

47. பாகவத சாரம், டி-430.

48. அகத்தியர் வைத்திய வல்லாதி-600, ஆர்-2281.

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/58&oldid=1571130" இலிருந்து மீள்விக்கப்பட்டது