உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பும் வகையும்

"பொய்கைபேய் பூதன் மழிசைமன் மாறன் புகழ்மது ரக்கவி சேரன்

வையமென் பட்டர் பிரான்திருக் கோதை வாழ்த்தடி யாரடிப் பொடியார் மையறு பாணன் வாட்கலிக் கன்றி வாழ்த்துவோர் மனமல மறுக்குஞ்

செப்பங் கயமாந் திருவடித் துணையே துணையெனக் கொண்டுசே விப்போம்

43

திருமால் அடியார் பன்னிருவரையும் துதிக்கும் இப்பாடல் அமைந்த சுவடியில் சேனைமுதலியார், அரங்கநாயகியாகிய இலக்குமி, திருக்குருகைபிரான், எதிராசர், வேதாந்ததேசிகர் ஆகியோரைத் துதிக்கும் தனித்தனிப் பாடல்களும் காணப்பெறுகின்றன. யனைத்தும் நூலாசிரியரால் பாடப்பெற்றவையாகும்.

ஒரு நூல் சுவடியில் வேறு நூல் பாடல்கள்

6

வை

தொல்காப்பியத்தில் : தொல்காப்பியச் சுவடிகளில் இறை வணக்கப் பாடல்கள் இடம் பெறவில்லை. முதற்பகுதியாகிய எழுத்ததிகாரத்தில் 'எழுத்தெனப்படுப் என்னும் நூற்பாவே தொடங்குகிறது. பின்னால் சேர்க்கப்பட்டதாகப் பாயிரம் மட்டுமே காணப்படுகிறது. இரண்டாவது பகுதியாகிய சொல்லதி காரத்திலும் அடுத்த பகுதியாகிய பொருளதிகாரத்திலுங்கூட, இறைவணக்கப் பாடல்கள் இல்லை. ஆனால் சேனாவரையர் உரையோடு கூடிய சொல்லதிகாரச் சுவடிகள் சிலவற்றில் மட்டும் முறையே விநாயகன், சிவபெருமான், கலைமகள், அகத்தியர் ஆகியோர்மீது பாடப் பெற்ற நான்கு பாடல்கள் காணப்படு கின்றன.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு (1923),ஆறுமுக நாவலர் பதிப்பு (1856), அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிப்பு (1981) ஆகியவற்றில் அப்பாடல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.

மகாபாரதத்தில்

'நீடாழி யுலகத்து மறைநாலோ

டைந்தென்று நிலைநிற்கவே"

என்னும் தொடக்க அடியையுடைய முழுப் பாடல் வில்லிபுத்தூரார் மகாபாரதம் (டி. 2102), நல்லாப்பிள்ளை

பாரதம் (4. 2101)

ஆகிய இரண்டு சுவடிகளிலும் காணப்படுகிறது.

49. கோலாசல ஸ்தலபுராணம், ஆர்-84.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/59&oldid=1571131" இலிருந்து மீள்விக்கப்பட்டது