உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

சுவடி இயல்

நிகண்டுகளில்

"எண்ணிய வெண்ணிய வெய்துப கண்ணுதற் பவள மால்வரை பயந்த

கவள யானையின் கழல்பணி வோரே"

என்னும் பாடல் சூடாமணி நிகண்டு (டி. 19), அகராதி நிகண்டு (டி-4), யாப்பருங்கலக் காரிகை (டி-81) ஆகிய பல சுவடிகளில்

காணப்படுகிறது.

கலைமகள் வணக்கப் பாடல்

"ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கு மென்னம்மை...

50

81

டுவள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு. என்று தொடங்கும் கலைமகள் துதிப்பாடல்கள் கப்பல் சாஸ்திரம் (டி. 1996) என்னும் சுவடியில் காணப்படுகிறது. இவையனைத்தும் படியெடுப்போர் சேர்த்துவிட்டவையாகும்.

படியெடுப்போர் இயற்றிச் சேர்த்தவை : கபிலை வாசகம் என்னும் சுவடிகள் நான்கு உள்ளன. (டி.388-391) அவற்றுள் 391 ஆம் எண்ணுள்ள ஒரு சுவடியில் மட்டும் ஒரு வெண்பா புதியதாகக் காணப்படுகிறது. அது அச்சுவடியில் உள்ள பிற ஓலைகளைக் காட்டிலும் வேறுபட்டதாகவும், சிறிது புதியதாகவும் உள்ள ஓரு ஓலையில் எழுதப் பெற்றுள்ளது. பொருளால் தொடர்புடையதாக அமையுமாறு படியெடுப்போர் சேர்த்த பாடலே என்பது தெளிவாகிறது. அவ்வெண்பா : "வெற்பதனில் வேங்கையினால் மெய்ஞ்ஞான மும்புகழும் சொற்கபிலை வாசகத்தைச் சொல்லவே - நற்பினுடன் பூணார மார்பன் புலித்தோ லுடையழகன் காணாத கண்ணே கருத்து”

நூலொடு இயற்றிச்

நூலின் செய்தி கூறும் பாடல் - பாயிரம் : இறைவணக்கப் பாடலையடுத்து நூலின் பெயர், நூலாசிரியர் பெயர், நூல் வந்த வழி, நூல் நுவலும் செய்தி, நூலின் பயன் ஆகியவற்றில் சில, பல செய்திகளைக் கூறி நூலைத் தொடங்கும் முறையும் சில சுவடி களில் காணப்படுகிறது.

"பன்னரும் பொருள்வி ளக்கத்

தீபிகை பகர்வேன் பாரில்’52

50. சரசுவதி அந்தாதி, காப்பு.

51. தனிப்பாடல் திரட்டு, காளமேகப்புலவர் பாடல். 52. அரும்பொருள் விளக்கத் தீபிகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/60&oldid=1571132" இலிருந்து மீள்விக்கப்பட்டது