உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பும் வகையும்

"முத்து முதுகுன்ற முத்த நதிவடபால் வைத்தபுகழ்க் கானூர் வாழ் வவதரித்த

பத்தன்பரி பூரண னுரைத்தபா மாலை

இத்தனையு மோதுவார்க் கெட்டுஞ்சிவ பதமே 'க

45

இவற்றில் நூலின் பெயர், நூலாசிரியரின் பெயர்,நூலாலாம் பயன் ஆகியவை அடங்கியுள்ளன.

66

ஆதியினிற் சதுர்முகனு மறைந்தான் வீணை

யருமுனிவர் வியாசருக்கங் கறைந்தான் ஞானச்

சூதமுனி வனுக்குரைக்கச் சவுன கர்க்குச்

சொன்னவட மொழியதனைச் சூட்ச மாக

ஓதியபாத் துமகாண்ட முத்த ரத்தி

னுரைத்தபடி தென்மொழியா லுரைத்தே மந்தச் சீதரனார் பொன்னரங்கன் காதை யென்றும் செப்பிடுவோர் பரமபதஞ் சிறந்து வாழ்வார்”

"மொழிந்துமே நூல்கள் தோறும் முறைமுறை சோதித் தேறி வழிசிசு நோய்ம ருந்து வகைவகை யுரைப்போ மன்றே’6.5 இப்பாடல்களுள் நூல் வந்த வழி, நூல் நுவலும் செய்தி, நூலின் பயன் ஆகியவை தெளிவாகக் கூறப்படுகின்றன. இவை நூலாசிரியர் களால் இயற்றப் பெற்றவை. இவை,

ஆக்கியோன் பெயரே வழியே எல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோடு ஆயெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே 6

என்னும் இலக்கணத்திற்கேற்பப் பாயிரச்செய்திகளாக அமைந்தவை யாகும். நூலாசிரியர்கள் பாயிரங்கூறும் இலக்கண முறையைக் கையாண்டனர் என்பதற்குச் சான்றாகும் இப்பாடலகள், பெரும் பாலான நூற் சுவடிகளில் காணப்படுகின்றன.

சுவடிகளின் நூற்பகுதி அமைப்பு : அமைப்பு: சுவடியின் எல்லா ஏடு களும் இடது, வலது ஓரங்களில் சுமார் ஓரங்குல அளவு இடம் விட்டு எழுதப் பெற்றுள்ளன. வலது ஓரத்தில் இடமே இல்லாமல் இறுதிவரை எழுதப் பெற்றுள்ள சுவடிகளும் உண்டு. இடது ஓரத் தில் உள்ள வெற்றிடம், திருச்சிற்றம்பலம் போன்ற பல தொடர் களால் அமைந்துள்ளது. அத்தொடர்களுள் சில:

53. பரிபூரணசித்தி, சுவடி. டி. 1574.

54. கோலாசலஸ்தலபுராணம், ஆர்.84.

55.

தன்வந்திரி குழந்தைவாகடம்,பா. 4. 56. நன்னூல், 47.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/61&oldid=1571133" இலிருந்து மீள்விக்கப்பட்டது