உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பும் வகையும்

47

எழுதும் முறை: பாடல்கள் உரைநடை போன்று தொடர்ந்து எழுதப் பெற்றுள்ளன. பாடல் அடிகளாகக்கூட பிரித்துக் காட்டப் பெறுவதில்லை. மூலம் மட்டும் அடங்கிய சுவடியாயின் ஒரு பாடல் முடிந்தவுடன் பாடலின் எண் கொடுக்கப் பெற்றுள்ளது. அவ் வெண்கள் தமிழ் எண்களாக அமைவதால் அவை ஒரு பாடலின் முடிவுச் சொல்லோடும், அடுத்த பாடலின் தொடக்கச் சொல்லோடும் தொடர்ந்து நின்று அச் சொற்களைப் பிரித்து அறிய முடியாமல் மயக்கத்தை ஏற்படுத்துவதும் உண்டு.

பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை ஆகிய உரைகளோடு கூடிய நூலாயின் பாடலை அடுத்து அவ்வுரைகள் தொடர்ச்சியாக எழுதப் பெற்றிருக்கும். அவ்வுரைகளின் முடிவில் பாடல்களின் எண்கள் கொடுக்கப் பெற்றிருக்கும். இவ்வகை அமைப்பும் உரை களைப் பிரித்தறிவதில் பெருஞ்சிக்கலை ஏற்படுத்துகிறது. இடை யிடையே கொடுக்கப் பெறும் உட்தலைப்புகளும் இவ்வாறே அமைந்துள்ளன. அல்லிகதை என்னும் ஒரு சுவடியில்,

“ஆனகுரு தன்புதல்வன் அசுபத்தா மாவுடனே" என்னும் அடி முடிந்து விருத்தம் என்ற தலைப்புடன் ஒரு பாடல் தொடங்கு கிறது. சுவடியில் எவ்வித குறியீடும் இன்றி தொடர்ந்து எழுதப் பெற்றுள்ளதால், இதனைத் தாளில் படியெடுத்தோர்,

"ஆன குரு தன்புதல்வன் அசுபத்தா மாவுடனே

விருத்தம் ஆனைதேரும் பரிகரியும் அம்பத்தாறு ராசாக்கள்” என்று ஒரு அடியில் ஐந்து சீர்களாக அமைத்து எழுதினர். 51 தொடர்ச்சியாக எழுதப் பெறும் சுவடிஎழுதும் முறையால் இவ்வாறான சிக்கல்கள் பல ஏற்படுகின் றன.

முடிவும் தொடக்கமும் : ஏட்டில் ஓர் ஏட்டில் ஓர் எழுத்து எழுதக்கூடிய இடத்தைக் கூட வீணாக்குவதில்லை யாதலின் எழுத்துகளும் சொற்களும் வரி முடிவில் பிரிக்கப் பெற்று எழுதப்பட்டுள்ளன. அதாவது கொ' என்ற எழுத்தை எழுத ஒரு வரியின் இறுதியில் 'கெ' என்று எழுதிவிட்டு அடுத்தவரி முதலில் கால் (ஈ) எழுதப் பெற்றுள்ளது. இது கெர என்று படிக்கும் நிலையை ஏற்படுத்து கிறது. இதே தே நிலை ஓர் ஏட்டின் முடிவிலும் அடுத்த ஏட்டின் முதலிலுமாகத் தொடருகிறது;

தொடருகிறது; பக்க முடிவும் அடுத்த பக்கமும் இவ்வாறு தொடருகிறது. சில எடுத்துக்காட்டுகள்:

57. அல்லிகதை, சுவடி, வரி. 2356-57.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/63&oldid=1571135" இலிருந்து மீள்விக்கப்பட்டது