உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I

48

சுவடி இயல்

1.

2.

இந்திரபட்ட ரபிடேகனாய்

திரிலோகமு

இந்திர பட்டாபிடேகனாய்

திரிலோகமு மோரடியால்

மாரடியால்

3.

விமலனாங்கவர்

விமலனாங்கவர்க் கருள்செய

ககருள்செய

4.

கூறியதெ

கூறியதென்றவாறு

ன்றவாறு

அமைப்பில் சில பிரிப்பு முறைகள் : பிற்கால ஏடுகள் சிலவற்றில் எண்களுக்கு முன்னும் பின்னும் கோடுகள் போடப் பட்டுத் தெளிவாகக் காணப் பெறுகின்றன. அவ்வெண்கள் முறையே, - க -, - உ-, - உ கஉ உஙஉ என்பனவாகிய பிரிப்புக் குறிப்பு களுடன் காணப் பெறுகின்றன. இம்முறையால் ஓரளவு பாடலின் முடிவும் தெளிவாகிறது. பதவுரை, பொழிப்புரை, உட்தலைப்பு இவற்றிற்கிடையேயும் இவ்வாறான பிரிப்பு முறை காணப் பெறு

-உக

>

கிறது. மிக நீண்ட ஏடுகளாயின் ஒவ்வொரு பக்கமும் இரண்டு பத்திகளாகப் பிரித்து எழுதப் பெற்றுள்ள சுவடிகளும் காணப் பெறுகின்றன. அம்மானை, கலிவெண்பாவாகிய கண்ணிகள், சிந்து, தரு முதலான சந்தப் பாடல்கள் ஆகிய நடையில் அமைந்த பிற்கால நூல்கள் சில பாடல் அடிகளாகப் பிரிக்கப்பட்டும் எழுதப் பெற்றுள்ளன.

சுவடிகளின் இறுதி இறுதி அ அமைப்பு - முற்று : ஆசிரியர் பெயரும், நூலின் பெயரும், பாடல் எண்ணிக்கையும் கூறி, நூல் முற்றும் என்ற கூற்று இறுதியில் காணப் பெறும். நூலினைக் கற்போர்

பெறும்.

பெறும் பயன் கூறி வாழ்த்துடன் முடிப்பதும் உண்டு.

"மேழித் துவசன் விளங்கிய புலியூர் வாழ்நற் சிதம்பர ரேவண சித்தன்

நீதியிற் றருமக ராதி நிகண்டினிற்

பத்தாம் வகாரா திப்பெயர்த் தொகுதி

மொத்தஞ் சூத்திர முந்நூற்றேழ் நான்கே’58

இது ஆசிரியர், நூல்,பாடல் தொகை, முற்று ஆகிய செய்திகளைக் கூறும் இறுதிப்பாடலாகும்.

58. அகராதி நிகண்டு, சுவடி, டி.4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/64&oldid=1571136" இலிருந்து மீள்விக்கப்பட்டது