பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" கணியிடை ஏறிய சுவையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும் பாகிடை ஏறிய சுவையும் "சி - என்று தமிழ்ச் சொல்லின் சுவை இனிமையை இசைக்கிறது பாவேந்தரின் இன்சுவைக் கவிதை. கழாரம்பர் என்னும் பழம்புலவர், & ،6 ، و هم (ب م م ، * * னிப்பொ A °葛 தமிழ்சிவம் இனிமை என்னும் தனிப்பொருளதாம் என்று கண்டு நூற்பாபடைத்தார். எனவே பண்பட்ட மொழியின் சொல்லில் இனிமை இழையோட்டமாகும். to of பொருளின் அழுத்தம் ' - என்னும் தொடர் அடியார்க்கு நல்லாரின் அரும்படைப்பு: கருத்தை முழங்கும் தொடர். - பொருளின் அழுத்தமா? அது என்ன அழுத்தம் என்று வினவத் தோன்றுகின்றது. --- - 'அவன் செய்தான்' என்பதை 'அவனே செய்தான்' என்றால் செய்த வன் அவனன்றி வேறு ஒருவன் அல்லன்' என்று 'அவன்' அழுத்தம் பெறுகி றான். தேற்றேகாரப்பொருள் இவ்வாறு அழுத்தம் தரும். 'நிறைவாகக் கூறினான்' என்பதை 'முடிவாகக் கூறினான்' என்றால் கூறியதில் ஒர் உறுதி ஒலிக்கிறது. அதையே "அறுதியாகக் கூறினான்’ என்றால் கூறியதில் ஒர் அழுத்தம் பிறக்கிறது. " நிலத்தினும் பெரிது ' என்னும்போது அவன் நட்பு, நில அளவை ஒர் எல்லையாகக் காட்டுகிறது. " மண் தேய்த்த புகழினான்'," என்னும்போது அவன் புகழ் மிகப் பெரிய ஒன்றையும் தேய்த்துச் சிறிதாக்கிப் புகழ் உயர்வு பெற்று, பொருள் அழுத்தம் பெறுகிறது. - 4 பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள் ! பக்கம் 87 5 கழாரம்பர்: பேரிசை' நூற்பா (பழம்பாடல்) 6 தேவகுலத்தார். குறுந் 3-1 - 7 variaxirລver: laobu. 1-36 2.