பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லாயிரம் ஆண்டுக்காலமாகத் தான் சுருங்கிச் சுருங்கிக் குளிர்ந்தது. பிய்ந்தபோது ஒர் ஒழுங்கான உருவமில்லாதிருந்த பூமி. சுற்றின் ஈர்ப்பால் உருண்டை வடிவம் பெற்றது; உருண்டைக் கோளமாகியது. குளிர்ந்த இந்த உருண்டைக் கோளத்தின்மேல் நிலப்பகுதியில் உயிரினம் தோன்றியது. ஒன்பது கோள்களில் உயிரினம் உள்ள கோளம் இப்பூவுலகம் என்பதைக் காண்கின்றோம். பிற கோள்களில் உயிரினம் இருக்குமா என்ற ஆய்வு, 'செவ்வாய்க் கோளத்தில் இருக்கலாமோ என்னும் ஐயத்தில்தான் நிற்கின்றது. இப்போது இந்த ஐயமும் வினாக்குறியாகித் தேய்ந்து வருகின்றது. 1991இன் இடையில் அமெரிக்க நாட்டு டெக்சாலில் நடந்த ஆய்வின்படி கி. பி. 2019 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கோளில் மாந்தரை இறக்கியாக வேண்டும் என்று குறி வைத்து, 1999ஆம் ஆண்டிறுதிக்குள் செவ்வாயில் எறும்புகளின், பாம்புகளின் முட்டைகளை வைக்கத் திட்ட மிட்டுள்ளனர். ! ? பிற கோள்களில் உயிரினத்தை வாழவைக்க முடியுமென்றும் ஆய்வு மேற்கொள்ளப்பெற்றது. சிக்காக்கோ நாட்டைச் சேர்ந்த பெண் அறிவியல் ஆய்வாளர் திருமதி ஒம்நெக் ஆனக் என்பவர் வீனசு என்னும் வெள்ளிக் கோளில், நம் நிலப் பாலைவன அமைப்பு உள்ளது. இரண்டு இட வாழ்க்கைக் கும் வேறுபாடு இல்லை. என்றாலும் அங்கு வாழவைக்கலாமா என்பது வியப்பிற்குரிய ஒன்றே என்று கண்டுள்ளார்.28 இப்பூவுலக உயிரினத்தின் தோற்றம்பற்றி, I LGS)-lil 13,067 Giro5 (Creationism) 2 படிமுறைக்கொள்கை (பரிணாமம்-Evolutionism) என இரு வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. படிமுறைக் கொள்கையை நுணுகி ஆராய்ந்த டார்வின் (Darwin) 1990இல் ஓர் உண்மையைக் கண்ட றிந்து இவ்வாறு கூறினார்: - " தன் தோற்றம் தனி ஒரு வழி கொண்டது என்று மாந்தன் கருதிக்கொள்ள எவ்வகைச் சான்றும் இல்லை. வளர்ந்த வழியில் ஒரு பிரிவுக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்று கூறிக்கொள்ள வேண்டியவனே "21 . . . 19 . . . . . . . . . . . தினகரன் (நாளிதழ்) 13-6-1991 பக். 3 செய்தித் துளிகள் 20 ... * - - -- * - * * 23-5-1991 பக். 3 . . ix. 21 தார்வின் (மாந்தன் தோற்றம்) Dexent of Man 11