பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கோ, தனித்தனியாகப் பல இடங்களிலோ படிமுறை வளர்ச்சிப்படி மாந்தர் இனம் தோன்றியிருக்குமானால் மேலே கண்ட அக, புற உறுப்புக்களில் இத்துணை ஒற்றுமை அமையாது. சிறிதளவேனும் வேறுபட்ட அமைப்பு நேர்ந்திருக்கவேண்டும். அவ்வாறன்றி ஒரே நிலையான-ஒத்த அமைப்பான உடல், உறுப்பு வடிவமைப்புகளே உள்ளமையால், மாந்த உயிரினம் ஒரே இடத்தில் முதன்முதலில் தோன்றியிருக்க வேண்டும். பின்னர் சூழப் பரவி யிருக்க வேண்டும். இதுதான் அந்த உள்ளடக்கமான உண்மை. இந்தப் பரவலான வாழ்வில் ஆங்காங்கே வெப்ப, தட்ப, மண் வாகு களுக்கு ஏற்ப அளவு, நிறம் முதலிய மாற்றங்கள் பெற்றிருக்கவேண்டும். இவ்வாறுதான் நேர்ந்திருக்கவேண்டும் என்று முடிவு கொள்வதில் நம்பிக்கை கொள்ளலாம். - அவ்வாறு நேர்ந்த முதல் தோற்ற இடம்-முதல் மாந்த உயிரினம் தோன்றிய இடம்-முதல் தாய் நிலம் எது? முன்னர் காணப்பெற்ற மண்டை யோட்டு ஆய்வின் படி பெரும்பகுதி உலகின் தெற்கு நிலப்பகுதி உரிய தாகின்றது. - நில ஆய்வும், உயிர்த்தோற்ற ஆய்வும் உலகின் தெற்குப் பகுதியை அடையாளங் காட்டுகின்றன. கிறித்துவ சமயக் கோட்பாடு முதல் மாந்தராகிய ஆதம்-ஏவாள் என்பது. இச்சமயக் கருத்தையும் வரலாற்றுக் கருத்தாகக் கொண்டு ஒரு பெரும் ஆய்வு கலிபோர்னியா பல்கலைக்கழக அறிவியல் வல்லு நர்களால் தொடங்கப்பெற்றது. நிகழும் ஆண்டில் (1991) அவர்கள் கண்ட முடிவு "இரண்டு இலக்கம் ஆண்டுகளுக்கு முன்னர் மாந்தர்-என்ற ஆய்வில் ஆதம்-ஏவாள் உலகின் தெற்கு நிலப்பகுதியான ஆப்பிரிக்க நாட்டில் தோன்றினர்' என்பதாகும். இக்கருத்தும் மாந்தன் தோற்றம் தெற்கு நிலப் பகுதி என்பதற்கு ஒருசார்பான சான்று எனலாம். அத்தெற்கு நிலப்பகுதியிலும் மலைநிலப் பகுதியே மாந்தரினத் தோற் றத்தின் முதல் நிலம் என்பதற்கும் கருத்துக்கள் ஒத்து வருகின்றன. சமயக் கருத்துக்களின்படியும் நோக்கினால் நீரில்தான் முதல் உயிர்த் தோற்றம் நேர்ந்தது என அறிகின்றோம். மீன், ஆமை, பன்றி முதலிய தோற்றரவுகள், ஆதாம் ஏவாள் முதலிய விவிலியக் கருத்துக்களும் சார்பா கின்றன. அந்நீர், கடல்நீர் என்றுதான் கொள்ளவேண்டும் என்பது அன்று. 23 ... ... ... தினகரன் (நாளிதழ்) 11-6-1991 பக் செய்தித்துளிகள் 鳶