பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்வொலியாம் 'ஆ' சுட்டொலியாக 'அ' ஆகி, தாடையின் அசைவால் 'அம்' என்னும் அசை ஆயிற்று. மேலும் ஓர் 'அம் என்னும் அசை கூடி அம்-அம்-அம்மம் (தாய்ப்பால்) ஆயிற்று. அம்-ஐ-அம்மை; அம்-ஆ-அம்மா; அன்-ஐ- அன்னை; அவ்-ஐ-அவ்வை; அண்-அம்-அண்ணம்; அண்-அன்-அண்ணன் இவ்வாறே பிறவும் அசைந்து மொழிக்கு இசைவாயின. அசைமொழிகள் பிறந்தன. இந்த அசைமொழி. மொழி முளையின்-வேரின்-தளிர் விட்டதன் அறி குறி. இவ்வாறு அறிகுறி தந்த உறுப்புக்களில் மிகுதியும் பங்கு பெறுவது "நா" என்னும் உறுப்பே. ஆதலின் சொல்லும் மொழியும் நாவாகவே, - "நா நலம் என்னும் நலன் உடைமை (திருக்குறள்: 641) 'யா காவார் ஆயினும் நா காக்க (திருக்குறள்: 129) 'நாவினாற் சுட்ட வடு’ 3 y 129) "நா நவில் புலவர் (புறம் 282: 18, 'நடத்திறம் (புறம் 346: )ே என்றெல்லாம் பாடப்பட்டது. இந்த அசைமொழி மொழிக்கூறில் சம் பங்கு கொண்டது. இச்சமபங்கில் ஒட்டுறவான பங்கு கொண்டதே அடுத்த படியாகிய பலுக்கு மொழி. 6. பலுக்கு மொழி சுட்டொலிக்கு நா நெகிழ்ந்தது; அசைமொழிக்கு நா அசைந்தது. அசைந்து அண்ணம், உதடுகளுடன் உதவியது. மொழிக்குரிய பிற உறுப்பு களில் 'பல்”மேல் கீழ்த்தாடைகளுடன் இயங்கி மொழிக்குத் துணை நிற்கின்றது. அசைமொழியுடன் ஒட்டுறவாக இப்பல்லின் செயற்பாடு பலுக்கல்’ எனப் பட்டது. பல் என்னும் சொல்லை நோக்கினால் 'ப', 'ல்' என்னும் இரண்டு ஒலிகளை உணர்கிறோம். 'ப' உதடு, இதழ் இரண்டும் பொருந்த உண்டாவது. 'ல்' மேல், கீழ் முன் பற்களின் முனைகள் பொருந்துவதால் பிறப்பது. இதுதான் 37