பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லின் முதல் மொழித்தொண்டு. இவ்வாறு இ) ూ@_(L- ல்) ஒலிகளை எழுப்பிய ஒலிகளைக்கொண்டே இவ்வுறுப்பு பல்' எனப்பெ. கொண்டது. இது பல் தன் செயலால் தான் பெற்ற பெயர். இவ்வாறு செயற்படும் டல்லின் ஒலிக்கூட்டும் செயல் பல்-பலு-பலுக்கு-பலுக்குதல் எனவாயிற்று. இதன் இயைபிலேயே மொழி உறுப்புக்களில் தனித்தனியாகவும் கூட்டாகவும் ஒலிக்கப்படுதல் பேச்சு, பலுக்கல் (உச்சரித்தல்) எனப்பட்டது. பலுக்குதல் என்பது பண்டைச்சொல் அன்று என்று கருதிவிட முடியாது. தொன்மையி லும் இருந்து நூல்களில் இடம் பெறாமல் போயிருக்கலாம். பிற்கால மதுரகவி ‘என்னடி மெத்தப் பலுக்குகிறாய் என்றார். திருஞானசம்பந்தர் கண் பேச’ என்பதைக் கண் பலுக்க' என்று பாடினார். இவற்றையெல்லாம் ஓர்ந்து கண்ட மொழிஞாயிறு பாவாணர் உச்சரித்தல் என்று வழக்கிலிருந்ததை விடுத்துப் பலுக்குதல் என்று பேசி எழுதி பலுக்கு மொழி என்னும் சொல்லாட்சியை வழங்கினார். பல்லடியாகப் பிறந்த இச்சொல் சொல்லுக்கே பல்லைக் குறியாக்கியது. 'பல் போனால் சொல் போச்சு என்னும் வழக்கு இதனை வழிமொழிகின்றது. இவ்வாறு வளர்ந்த பலுக்கும் இயக்கந்தான் பலுக்கு மொழியாயிற்று. மொழியை மலர வைத்தது இப்பலுக்கு மொழியே. எனவே, பலுக்கு மொழியை மொழியின் மலர் எனலாம். - 'சுட்டொலிகள் தோன்றிய பின் சொல் வளர்ச்சியடைந்த மொழியைப் பலுக்கு மொழி (Articulate Language) என்பர். இதுவே மொழி எனச் சிறப்பித்துச் சொல்லப்பெறுகிறது' என்று மொழிஞாயிறு பாவாணர் எழுதி யுள்ளமை போன்று மொழி வரலாற்றில் பலுக்கு மொழிதான் மொழி-ஒலிக் கூட்டலின் உருவத்திற்கு முதற்பருவத்தை வழங்கியது. இவ்வாறு சைகை மொழியாம் கைச் செய்கைக்குப்பின் எழுந்த ஒலி மொழியின் வரலாற்றைச் செடிமமாக உருவகப்படுத்தலாம், . லம்-உக்கி வளி (նք நிதி வித்து-குரல் ஒலி முளை-உணர்ச்சி ஒலி வேர்-சுட்டொலி 籌 88. ஞா. தேவநேயப் பாவாணர் முதன் மொழி பக்.17 செடிமம்-தாவரம் - 璽發率