பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரி வடிவத்திற்கு விரல் அசைந்தது. விரல் முனை கோடிட்டது; வரைந்தது; எழுதியது. தொல்காப்பிய முதல் உரையாசிரியர் இளம்பூரணர் 'பரவுதல்' என்னும் சொல்லுக்கு அதைக் கேட்போனால் பொருள் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் மேல் நோக்கிச் சில மலர்கொண்டு தூவிக் காட்ட உணருமேல் அஃதே உணர்ச்சி வாயிலாக அறிக' என்றார். இதனையும் சைகைகொண்டு 'மலர் எடுத்து’ எனலாம். முதலில் கை விரல் குகைச் சுவரில் கோடிட்டு, அடுத்து நிலத்தில் கோடிட்டு, மல்ை நிலத்தில் உழும் சாலோட்டம்போல் கோடிட்டது. 'நந்து உழுத கோடு எழுத்தாகாது' என்பர். ஆனால், நந்து உழுத சால்கோட்டைப் பார்த்து எழுதிய மாந்தன் கோடு எழுத்திற்கு உதவிற்று. மேலும், சற்றுக் கடினமான இடத்தில் கீறியும், மரம், கல் முதலியவற்றில் வெட்டியும் எழுத் துலகில் மாந்தன் புகத் தொடங்கினான். இவை இயற்கையாகும். இவ்வியற் கையின் வளர்ச்சியில் நேர் கோடு வளை கோடுகளை இணைத்து உருவத்தை வரைந்து படம்போட்டுக் காட்டத் தொடங்கினான். உண்பதற்குக் கை விரல் களைக் குவித்து வாயண்டை பொருத்திக் காட்டிய மாந்தன் கிழங்குபோல தினைபோல, காய்போல படம் போட்டுக் காட்டி உணர்த்தினான். கண்ணைக் குறிக்க, அதன் பார்வையைக் குறிக்க, பார் என்று சொல்ல கண் போன்று வளை கோட்டால் வட்டம் போட்டான். பொருள்களைக் குறிக்கப் படம் போட்டது போன்று குணங்களைக் குறிக்கவும் படங்கள் போடப்பட்டன. செல்வத்தைக் குறிக்க மாட்டுக் கூட்டத்தையும், நட்பைக் குறிக்க இரு கைகள் கோத்ததையும் படமாக்கினான். இப்பட எழுத்துக்கள் மொகஞ்சதரோ அகழ்வுப் பொருள்களில் உள்ளதை அறிஞர் ஈராக பாதிரியார் கண்டறிந்து வெளியிட்டுள்ளார். இவ்வாறு வரைந்தது பட எழுத்து. (Pictograph/ Ideographic) ஆப்பிரிக்க நாட்டு, வட அமெரிக்க நாட்டுப் பழங்குடி மக்க ளிடம் இப்படஎழுத்து இன்றும் நடைமுறையில் இருக்கிறது. காண்டினேவியர் ஒரு படத்தையே சற்று விரிவாகப் போட்டு ஒரு கதையைச் சொல்லும் முறையைக கையான டவா. . - பட எழுத்தின் அடுத்த வளர்ச்சியாக ஒலியின்-ஒலி எழுத்தின் அறிகுறி யாகக் கோடுகளால் வரைந்து காட்டும் 'வரி எழுத்து' எழுந்தது. இந்நிலை தான் மாந்தனின் எழுத்து நாகரிகத்தைத் தோற்றுவித்தது. இவ்வாறு எழுந்தது 'ஒலி வடிவ எழுத்து' (Phonetic Writing) எனப்பெற்றது. வாய் 42. இளம்பூரணர்: தொல், - சொல். 387 வரை