பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னர், தமிள - தவிட என்னும் வடிவங்கள், த்ரமிள - த்ராவிடதிராவிட என்று வடமொழியில் திரிந்தது' என்றதும் இங்கு கொள் ளத் தக்கது. எவ்வழியில் நோக்கினும் தமிழே மொழிப்பெயர்; இனப்பெயருக்கு முரியது. வடமொழியாளர்தாம் இப்படித் திராவிடம் என்று திரித்தனர் என்பதற்கு மாற்றுச் சான்றுகள் உள்ளன. தமிழ் என்பதன் எழுத்தொலிகள் அனைத்தையும் மாற்றாமல் பெரும்பகுதி அவ்வொலி கொண்டதாக வேற்று மொழி-வேற்று நாட்டார் வழங்கினர். ஆரிய மொழி வழிப்பட்ட மொழியிலும் இவ்வாறு தமிழ் உருவத்தைக் காணலாம். அவற்றுள் ஒரு சில: மகாவமிசம் என்னும் நூல் பாலி மொழியில் எழுதப்பெற்றது. அதில் 'தமிளோ' என்று தமிழ் சொல்லப்பெறுகின்றது. இதில் தமிழ் ஒலியை ஒரு சிறு மாற்றத்துடன் காணலாம். கிரேக்க நாட்டவரான எகிப்திய குலத்து வரலாற்றறிஞர் தாலமி (கி. பி. 119-161) தமிழ்நாட்டை டிமிரிகா (கா-கிரேக்கத்தில் நாடு என்று பொருள்) என்றார். இதைத் 'தமிழகம் என்பதன் மாற்றாகவும் கொள்ளலாம். தாரநாத் என்பார் (1578இல்) எழுதிய நூலில் தமிழைத் 'திரமில் என்றார். நேபாளத்தின் தெற்குப் பகுதியில் வாழும் பழங்குடியினர் திமில்' எனப் படுகின்றனர். இவர்கள் பேசும் மொழி பெரிதும் தமிழோடு ஒத்துள்ளது. கங்கையின் முற்காலத் துறைமுகம் 'தமிழுக்கு என்று பெயர் கொண்டதாக விளங்கியுள்ளது. இவை அறிஞர் வி. கனகசபைப் பிள்ளை கண்டறிந்தவை. : 'ஆப்கானிஸ்தானத்தில் ஒரு நகரம் 'தமிழக்' என்னும் பெயரில் வழங்கு கின்றது. அங்கு வாழும் இசுலாமியர் தமிழ் கலந்த சொற்களில் பேசுகின்றனர்' என்ற மாகறல் கார்த்திகேயனார் காட்டியுள்ளார். . இவை யாவும் தொன்மைத் தமிழர் பல நிலப்பகுதிகளில் பரவிச்சென்ற வரலாற்றைக் குறிப்பாகச் சொல்வதுடன் தமிழ் ஒலிப்பையும் நினைவுறுத்துகின்றன. எனவே, தமிழைத் 'திராவிடம் என்று குறிப்பது திரிபான பாதைவழிக் கொண்டது. 'இயல்பே தமிழாகும்' என்க-அயலார். 43 &nguisergår: Linguistic Survey of India, Vol 4 Page 298 44. வி. கனகசபைப் பிள்ளை - தமிழ்ப் பெருமை (கட்டுரை) செந்தமிழ் இதழ் தொகுதி பகுதி அ 45 மாகறல் கார்த்திகேயனார்