பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய, கிரேக்க, இலத்தீன், கெல்டிக்கு, செர்மானிய மொழிகளை ஒப்பிட்டு ஆராய்ந்த மொழியறிஞர் பலர். ५ - - س م" - g な ^。 'பல்வேறு மொழிகளுக்கும் முன்னால் ஆதாரமாக உள்ள இந்தோ - - *- * སྨན་ཐ་ན་ས་ * x -: r ஐரோப்பிய மொழி ஒன்று இருந்திருக்க வேண்டும்' என்றுளர். இந்த ஐரோப்பிய மொழிகளுள்ளும், ஆங்கிலம், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளும் ஒரு பொதுத்தாய் மொழியிலிருந்து பிறந்திருக்கலாம் என்று பொதுத்தாய் என்னும் வளையத்திற் குள் கொணரப் பெற்றது. இதில் காட்டப்பெற்ற ஆங்கிலம் இடைக்காலத்தில் (கி. பி. 600) தோன்றியது. இஃது ஒரு புதிய மொழி. அதோடு ஒரு கலப்பு மொழி. இதனைத் தொன்மை வாய்ந்த சமற்கிருதத்துடன் அதன் குடும்பத் தொடர்பு கருதிக் கூறப்பெற்றுள்ளது. எனவே, இடைக்காலப் புதியமொழியாம் ஆங்கிலத்தை விடுத்தால் களத்தில் நிற்பது சமற்கிருதம் ஒன்றே. இங்கு அறிஞர் கால்டுவெல் கண்டறிந்து கூறிய, 'இந்திய (இதில் சமற்கிருதமும் அடங்கும்) ஐரோப்பிய மொழிகளின் மூல மொழிக்குத் தமிழ் மிக நெருக்கமானது என்னும் கருத்து நம் கவனத்தை ஈர்க்கின்றது. உலக மொழி அணுகலில் தமிழைக் காட்டிய அறிஞர் கால்டுவெல்லின் இக்கருத்து குறித்துக்கொள்ள வேண்டிய ஒரு முதன்மை அறிவிப்பு ஆகும். ஆயினும் மூல மொழிக்குத் தமிழ் மிக நெருக்கம்' என்றாரேயன்றி மூல மொழியாகத் தமிழைக் கொள்ள அவரால் இயலவில்லை. இயலாமைக்குக் கரணியம் தமிழ்ச்சொல் ஆழங்களைக்கொண்ட சங்க இலக்கியங்களையும் மொழி வரம்பைக் காட்டும் தொல்காப்பியத்தையும் அவர் அறியாததும் பயிலாததும் ஆகும். - இதைத் தொடர்ந்து, $ பழைய இந்திய மொழிகளின் மிகத் தொன்மையான உருவத்தை நம் ரிக் வேதப் (கி. மு. 1500) பாசுரங்களில் காணலாம். பழைய இந்திய மொழியின் மற்றொரு பகுதியிலிருந்து சமற். கிருதம், பிராகிருதம் பிறந்தன.”