பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது தமிழ்ச்சொல்லே. இதற்கு முதனிலையான ஞான்-அம் சேர்ந்து "ஞானம்' என்னும் அறிவுப்பொருள் தரும் சொல்லாகும். ஞானம் தமிழ்ச்சொல் என்பதை மொழிஞாயிறு பாவாணர் வட மொழிக்குத் தமிழ் வழங்கிய ஞான தானம்' என்னும் நயம்படத தலைப்பு தந்து விளக்கி ஞானம், தானம் என்னும் இரண்டு சொற்களும தமிழ்ச்சொற்களே என்று வேர்ச்சொல்காட்டி நிறுவி யுள்ளார். சூடாமணியிலும் (563) அறிவு என்னும் பொருள் தரும் சொல்லாக ஞாபகம் தரப்பெற்றுள்ளது. மேல் காணப்பெற்ற சங்கச் செர்ற்களின் பிறப்பு வரலாற்றை வேர்ச் சொல்லிலிருந்து அதனதன் வளர்ச்சிபைக் கூர்ந்து நோக்கினால் இயற்கையான படிமுறை வளர்ச்சி புலப்படும். இதுபோன்றே மொழிப்பொருள் கரணியத்தை ஞாய் முதல் ஒளிவரை கூர்ந்து நோக்கினால் பொருளின் படிமுறை வளர்ச்சி யைக் காணலாம். ஈன்ற ஞாய். தாயிடமாம் ஞாயில், ஒளி தந்து வளர்க்கும் ஞாயிறு, ஞாயிற்றிலிருந்து தோன்றிய ஞாலம், ஞாயிற்றால் ஞாலத்தில் நிகழும் கால நேரமாம் ஞான்று, காலம் கழித்த ஞான்ற, கழிந்த முன் இடம் ஞாங்கர், ஞாங்கரில் தோன்றிய ஞாறிய, ஞாறிய தோற்றத்தின் பின் தொடர்பாம் ஞாண் , தொடர்பில் பகைத் தொடர்புகொண்ட ஞாட்பு எனத் தொடர்ந்து வளர்ந்த பொருள் படிமுறை வளர்ச்சி ஞாபகம் கொள்ளத்தக்கது ஈங்கு எடுத்துக்கொள்ளப்பெற்ற எழுத்தாம் ருகரம் அதிகம் பயன் படாதது. அதன் வழிச் சொற்களுள் பல நகரத்திற்கு நகரம் இடம்பெற்று ஞாயில்-நாயில் என்றும், ஞாயிறு-நாயிற்றுக்கிழமை என்றும், ஞான்றநான்ற (தலை நாண் டுவிட்டது என நாண்டு என்றும், ஞாபகம்-நாபகம் என்றும் வழக்கில் திரிந்துள்ளன. ஞாங்கர் ஆங்கர்-ஆங்கு ஆங்கன் என்றும் பயின்றன. ஆனால், பல ஞகரச் சொற்கள் தமிழின் வழிமொழியாம் மலை ஞாலத்தில் வழக்கில் உள்ளது. அங்கு பான்-ஞான் என்று, நம்மில் நான் ஆகியுள்ளது. ஞாய் அங்கு உண்டு. இவற்றுடன் முன்காலத்தும் காலப்போக்கிலும் 'ரு' முதன்மொழியாக ஞாத்தல் (யாத்தல்)-கட்டுதல்; ஞாஞ்சில் (நாஞ்சில்}-கலப்பை; ஞாடு (நாடு}நிலப்பகுதி, ஞாதம் (ஞாலம்}-அறிவு, ஞாதி (தாய் ஆதி தாயாதி)-தாய்வழி உறவு; ஞாதா-அறிஞன்; ஞாயம் (நாயம்)--முறை; ஞாழ் (யாழ்)-நரம்புக் கருவி; ஞாளி-வள்ளைக்கொடி; ஞானம் (நாளம்)-குழல்நரம்பு ஞாற்றல் (நாற்றல்)-தொங்கவிடுதல் முதலிய சொற்கள் உள்ளன. இவை இலக்கியுங்