பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு பலர் திவவ்வேறு முனைகளிலும் காலங்களிலும் ஆய்ந்தும் ஓர் அடிப்படை ஒற்றுமை கொண்டுள்ளதை நோக்கினால், தமிழின் இயல்பு ஒரு படித்தானது என்னும் உண்மை புலனாகும். பொதுவாக மொழிப்பிறப்பு, வழக்கு என்று நோக்கினால் ಹೆನು ஆங்' காங்கு தனித்தனியே மொழி தோன்றியிருக்க முடியாது. தொன்மைத் தோற்றங்கொண்ட ஓரிடத்தில் தோன்றிய ஒரு மொழிதான் உலகத்தில் பரவிப் பல மொழிகளாகக் கிளைக்கக் கரணியமாயிற்று என்று கொள்வதே துணிந்த முடிபாகும். இது மொழி நுண்மைக்கும் ஒத்ததே. சமய நூலாரும இவ்வாறு அறிவித்துள்ளனர். கிறித்துவ சமய நூலாகிய விவிலியம், 4. - * 3 * ' உலக முழுவதும் ஒரு மொழியும், ஒரே பேச்சுமாக இருந்தது என்கிறது. இதனையும் ஓரளவில் ஒரு கணக்கில் கொண்டால் அந்த ஒரு மொழி என் தமிழாக இருக்கக்கூடாது? இவ்வாறு நினைத்த ஆய்வாளருள் மேலை மொழியினரும் உளர். இதில் முனைப்புக் காட்டியோருள் மொழிஞாயிறு பாவாணர் முதல்வர். வேறு துறை வல்லுநராயிருந்து ஆய்ந்தோர் பலர். அவ்வாறான தமிழருள் பொறியியலறிஞர் பா. வே. மாணிக்க நாயக்கர், " தமிழ் ஒலி கொண்டு உலகிலுள்ள எம்மொழியையும் பலுக்க முடியும். இதற்குத் தொல்காப்பியத்தில் இலக்கணம் உள்ளது ” என்று தாம் எழுதிய ஒலியிலக்கண ஆங்கில நூலில் காட்டியுள்ளார். மொழிநூல் கண்ட மாகறல் கார்த்திகேய முதலியார், " தமிழ்ச் சொற்களை மாத்திரம் ஒருவன் நன்கு ஆராய்ச்சி செய்தலைக் கொள்வானாயின் ஏனைய மொழிகளையெல்லாம் ஆராய்ச்சி செய்வ தற்கு இதுவே கருவியாகுமென்பதிற் சிறிதும் ஐயுறவில்லை ' .' என்றார். இவர் தமிழின் நுணுக்கமறிந்து கூறியவர். தமிழ்ச் சொற்களை மட்டிலும் ஆராய்வது எவ்வாறு ஏனைய மொழிக ளுக்கும் பொருந்தும் என்னும் ஐயம் எழலாம். இந்த ஐயம் போக்க, பன்மொழி யறிஞர் நல்லூர் ஞானப்பிரகாசரே சான்றாகிறார். இவ்வறிஞர் மேலை மொழிக ளுடன் 64 மொழிகளை அறிந்தவர்; ஆய்ந்தவர். தம் 84ஆம் அகவையில்தான் 59 ur. Gai. ldm soñảz 5muiž zř : The Tamil Alphabet—its Mystic Aspect 80 மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல்-பாயிரம் பக். 4